மதுரை:தமிழகத்தில் தேர்தல் வருவதால் பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என சென்னை பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மார்ச், ஏப்ரலில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போது மத்திய, மாநில அரசுகள் வருவாய் இழப்பை ஈடு செய்ய பெட்ரோல், டீசல் வரியை கூட்டியது. இன்று கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் 14 சதவீதம் இழப்பீடு வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. கார்ப்பரேட் வரிகளையும் தவிர்த்து விட்டது.
சமீப காலமாக மத்திய அரசின் பல செலவுகள் அதிகரித்து விட்டது. இந்த செலவுகளை சமாளிக்கவே மத்திய அரசு பெட்ரோல் வரியை அதிகரித்தது.தற்போது 74 ஆக உள்ள ரூபாயின் மதிப்பு 70 ஆக குறைந்தால் 6 சதவீதம் பெட்ரோல் விலை குறையும். கச்சா எண்ணெய் விலை 50 டாலர் ஆக இருப்பது 40 டாலராக குறைந்தால் பெட்ரோல் விலை ரூ.80க்கு வரும். இவை தவிர கொரோனாவுக்கு முந்தைய வரிகளை மீண்டும் நிர்ணயித்தால் விலை குறையும்.
டீசல் விலையை இதற்கு மேல் அதிகரித்தால் பணவீக்க விளைவு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதிரி இருப்பது நல்லது. இனியும் கச்சா எண்ணெய் விலை கூடினால் மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல் மூலப்பொளுக்கு 35 சதவீதமே செலவு. 65 சதவீதம் பிற செலவுகள், வரிகள் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் வருவதால், தமிழக அரசு பெட்ரோல் , டீசலுக்கு புதிதாக வரிகள் விதிக்க வாய்ப்பில்லை. சுப்பிரமணிய சாமி கூறுவது போல் பெட்ரோல் விலையை ரூ.40க்கு குறைக்கலாம் என்பதற்கு வாய்ப்பில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE