பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்ப காலத்தில்பெண்கள் சந்திக்கும் சில இடர்பாடு

Added : டிச 13, 2020
Share
Advertisement
கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் சில இடர்பாடுகளில், உடைகளை விருப்பத்திற்கு ஏற்ப அணிய முடியாதே என்ற கவலையும் ஒன்று. சாதாரண காலத்தில் விரும்பிய உடைகளில் வலம் வரும் பெண்கள், கர்ப்ப காலத்தில் 'தொளதொள' என உடைகளை அணிந்து நொந்து போகின்றனர்.இதற்கு சங்கடப்பட்டு கொண்டே கர்ப்பிணிகள் வெளியே வராமல் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். இவர்களின் கவலையை போக்கவே, கர்ப்ப
 கர்ப்ப காலத்தில்பெண்கள் சந்திக்கும் சில இடர்பாடு

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் சில இடர்பாடுகளில், உடைகளை விருப்பத்திற்கு ஏற்ப அணிய முடியாதே என்ற கவலையும் ஒன்று. சாதாரண காலத்தில் விரும்பிய உடைகளில் வலம் வரும் பெண்கள், கர்ப்ப காலத்தில் 'தொளதொள' என உடைகளை அணிந்து நொந்து போகின்றனர்.இதற்கு சங்கடப்பட்டு கொண்டே கர்ப்பிணிகள் வெளியே வராமல் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். இவர்களின் கவலையை போக்கவே, கர்ப்ப காலங்களில் பெண்கள் அணிய வேண்டிய உடைகள் உருவாக்க துவங்கிவிட்டனர்.அந்த வரிசையில் இணைந்துள்ளார் திருப்பூரை சேர்ந்த சுகன்யா. அவரிடம் பேசினோம்...
படித்தது பேஷன் டிசைனிங். 2009 முதல் முருகம்பாளையம் ரோடு, சி.எஸ்.ஐ., சர்ச் அருகே, 'பிங்க் உமன்' என்ற பெயரில் பெண்களுக்கான பேஷன் ஷோரூமை துவங்கி ஆடைகளை வடிமைத்து, விற்பனை செய்து வருகிறேன். எம்பிராய்டரி பிளவுஸ், சல்வார், லாங் பிராக், குழந்தைகளுக்கான பட்டுபாவடைகளும் லேட்டஸ்ட் ஸ்டைலில் வழங்குகிறோம்.சுத்தமான காட்டன், சாப்ட் பேப்ரிக் ரகங்களை ஜெய்ப்பூரில் இருந்து இறக்குமதி செய்கிறோம். கர்ப்ப கால ஆடைகளிலேயே, பாலுாட்டுவதற்கு தேவையான வசதியும் இணைத்துள்ளேன். ஆடைகளில், மறைமுகமாக, 'ஜிப்' பொருத்தப்பட்டுள்ளது.
இதை அணிந்தபடி, பெண்கள், பொது இடங்களில் கூட, குழந்தைக்கு பாலுாட்ட முடியும். பயணம் செய்யும்போது மேக்ஸி டிரஸ் பயன்படுத்தலாம். சுகமான பயணத்துக்கு ஏற்ற சூப்பரான உடை இது. கூடுதலான பேஷனை விரும்புவோர், 'ஜம்ப் சூட்' அணிந்து கொள்ளலாம். அதற்கு பொருத்தமான டி--சர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்து கொண்டால், மேலும் அழகாக தெரியும். பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு 'கவுன் மாடல்' உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட 'ஷிப்ட் டிரஸ்கள்' அவர்களுக்கு அதிக சவுகரியத்தை தரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X