ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு, மத்திய ரிசர்வ் படையின் பேரிடர் மீட்பு பிரிவில், 15 குழுக்களாக பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு, பொள்ளாச்சி ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம், முதல் குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று, இரண்டாவது குழுவில், 69 வீரர்கள் ஆழியாறு அணையில், ஒருநாள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
துணை கமாண்டான்ட் ராஜேஷ் தலைமையில், ஐந்து பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கினர். வெள்ளம் ஏற்படும்போது, நீரில் சிக்கிய நபர்களை மீட்பதற்காக தற்காலிக படகு அமைப்பது, 'லைப் ஜாக்கெட்' அணிந்து நீந்திச்சென்று மக்களை காப்பது, முதலுதவி உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE