பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை விலையில் மீண்டும் சரிவு : நெருக்கடியில் 65 ஆயிரம் விவசாயிகள்

Added : டிச 13, 2020
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களாக தேயிலை விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதால், 65 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிறு, குறு தேயிலை விவசாயிகள், 65 ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில், ஆக., மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு, 30 ரூபாய் கிடைத்தது. இதனால், சிறு

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களாக தேயிலை விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதால், 65 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிறு, குறு தேயிலை விவசாயிகள், 65 ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில், ஆக., மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு, 30 ரூபாய் கிடைத்தது. இதனால், சிறு விவசாயிகள் இலை முழுவதையும் கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்தனர். கடந்த, 10 ஆண்டுகளை காட்டிலும், நவ., மாதம் அதிகளவில் தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது.ஆக., மாதம், பசுந்தேயிலை கிலோவுக்கு, 30 ரூபாய் வரை கிடைத்தது. அக்., மற்றும் நவ., மாதங்களில், கிலோவுக்கு, 20 முதல் 23 ரூபாயாக குறைந்துள்ளது. டிச., மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் துாளுக்கு சந்தையில் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதனால், தேயிலை துாள் கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேக்கமடைந்துள்ளது. தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, கிலோ, 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், பசுந்தேயிலை கிலோ, 15 முதல் 18 ரூபாய் வரை விலை மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.விவசாய சங்க தலைவர் ராமன் கூறுகையில்,''கிலோ,30 ரூபாய் கிடைத்து வந்த தேயிலைக்கான விலை இரண்டு மாதங்களில் படிப்படியாக குறைந்து வருவதால், 65 ஆயிரம் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X