தேர்தலை எதிர்க்கும் டிரம்ப் வழக்கு: உச்சநீதிமன்றமும் தள்ளுபடி

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க, டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



latest tamil news


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க, டிரம்ப் மறுத்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை தொடர்ந்தார். கீழமை நீதிமன்றங்களில், இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, டெக்சாஸ் மாகாணம் உட்பட, 18 மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

'ஜார்ஜியா, மிச்சிகன், பென்னில்ஸ்வேனியா, விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில், ஜோ பைடனுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் பதிவானதில் மோசடி நடந்துள்ளது. 'அதனால், இந்தத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்' என, மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.


latest tamil news


டெக்சாஸ் மாகாணத்தில், மோசடி நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதுபோலவே, மற்ற மாகாணங்களின் நிலையும். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, அமர்வு கூறியுள்ளது.தேர்தல் முடிந்து, ஒரு மாதத்துக்கு மேலாகியும், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து வரும், டிரம்புக்கு, இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-202012:05:18 IST Report Abuse
Abdul Aleem இன்னும் நான்கு வருடம் சம்பாதிப்பது போய்விட்டதே என்று ஆதங்கம் இருக்க தான் செய்யும் இப்போ சீனா வை ஒன்னும் பண்ணமுடியாது இந்தியாவிடம் இருந்து சம்பாதிக்க முடியாது எந்த வூரும் சுற்ற முடியாது ஒரு வருடம் காரோண வந்து எங்கயும் சுற்ற வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்ன பண்ணுவது இது அவருடைய விதி.
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
13-டிச-202009:16:01 IST Report Abuse
Nithya தோல்வியை ஏற்க மறுக்கும் விடாகொண்டன் கொடாகொண்டன்...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-டிச-202006:20:26 IST Report Abuse
blocked user டிரம்ப் மட்டுமல்ல பைடன் செய்யப்போகிற கோமாளித்தனங்களை மக்கள் காணத்தான் போகிறார்கள்...
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
13-டிச-202010:42:32 IST Report Abuse
naadodiஇந்த விஷயத்துல உங்காளு ட்ரம்பை மிஞ்ச யாருமே கிடையாதுங்கோ.....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-டிச-202013:54:49 IST Report Abuse
தமிழவேல் இப்போவாவது, டிரம்ப் ஒரு கோமாளின்னு ஒத்துக்கிட்டியே அதுவே போதும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X