பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாற்றில் 'போம்' கழிவு குவியல்: மவுனம் கலைப்பார்களா அதிகாரிகள்?

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:எம்ப்ராய்டரி நிறுவனங்கள், நல்லாற்றங்கரையோரம், கழிவுகளை கொட்டி, சுற்றுச்சூழலை பாழ்படுத்தி வருகின்றனர்.திருப்பூரில் உள்ள சில சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி நிறுவனங்கள், சாயம், 'போம்' கழிவுகளை, ஆறு மற்றும் ரோட்டோரம் கொட்டி, இயற்கையை பாழ்படுத்தி வருகின்றனர். அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூருக்குள் வரும் நல்லாறு, நஞ்சராயன் குளத்தில்
 நல்லாற்றில் 'போம்' கழிவு குவியல்: மவுனம் கலைப்பார்களா அதிகாரிகள்?

திருப்பூர்:எம்ப்ராய்டரி நிறுவனங்கள், நல்லாற்றங்கரையோரம், கழிவுகளை கொட்டி, சுற்றுச்சூழலை பாழ்படுத்தி வருகின்றனர்.திருப்பூரில் உள்ள சில சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி நிறுவனங்கள், சாயம், 'போம்' கழிவுகளை, ஆறு மற்றும் ரோட்டோரம் கொட்டி, இயற்கையை பாழ்படுத்தி வருகின்றனர். அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூருக்குள் வரும் நல்லாறு, நஞ்சராயன் குளத்தில் சங்கமிக்கிறது. மழையால், நல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பிச்சம்பாளையம் அருகே, நல்லாற்றங்கரையோர பகுதிகளை, எம்ப்ராய்டரி நிறுவனங்கள், கழிவு கொட்டும் இடமாக மாற்றி விட்டன. ஆடைகளில், எம்ப்ராய்டரி செய்வதற்காக, 'போம்' எனப்படும் ஒருவகை காகிதம் பயன்படுத்தப்படுகிறது. எம்ப்ராய்டரி முடிந்தபின், இவை கழிவாக வெளியேறுகின்றன. மக்கும் தன்மை குறைந்த இக்கழிவுகளை, மூட்டைகளில் கட்டி, வாகனங்களில் கொண்டு வந்து, நல்லாற்றங்கரையில் போட்டு செல்கின்றனர்.கரையோரத்தில் கொட்டப்படும் கழிவுகள், படிப்படியாக ஆற்றுக்குள் சென்று, தண்ணீருடன் கலக்கிறது. ஏற்கனவே சாக்கடை கழிவால் மாசுபட்டுள்ள ஆறு, எம்ப்ராய்டரி கழிவு கலப்பதால் மேலும் மாசடைகிறது. மாசுகட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, ஆற்றில் கழிவுகளை கொட்டும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்ப்ராய்டரி கழிவுகளை அகற்ற பிரத்யேக இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X