விறகுக்காக வெட்டப்படும் மரங்கள் :கண்காணிக்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விறகுக்காக வெட்டப்படும் மரங்கள் :கண்காணிக்க எதிர்பார்ப்பு

Added : டிச 13, 2020
Share
திருப்பூர்:'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மரம் பாதுகாப்பு குறித்து, வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட வனக்கோட்டத்தில் உடுமலை, அமராவதி, வனச்சட்ட அமலாக்கம், திருப்பூர், காங்கயம், வந்தரவு மற்றும் கொழுமம் ஆகிய வன சரகங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு, காப்புக்காடு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் திறந்தவெளி

திருப்பூர்:'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மரம் பாதுகாப்பு குறித்து, வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட வனக்கோட்டத்தில் உடுமலை, அமராவதி, வனச்சட்ட அமலாக்கம், திருப்பூர், காங்கயம், வந்தரவு மற்றும் கொழுமம் ஆகிய வன சரகங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு, காப்புக்காடு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் திறந்தவெளி காடுகள் உள்ளன; காப்பு காடுகளுக்குள் நுழைய, மக்களுக்கு தடையுள்ளது.பாதுகாக்கப்பட்ட காடுகளில், வனத்துறை ஊழியர்களின் கண்காணிப்பில் தொய்வு தென்படுவதால், விறகுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. காய்ந்த மரத்துண்டுகள், வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு, ஓட்டல், டீக்கடை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. அந்த வகையில் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், விறகு ஏற்றிச் செல்லும் லாரிகள், முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், மரம் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சில விஷமிகள், மரங்களை விறகுக்காக வெட்டி சாய்க்கின்றனர். காய்ந்த மரங்களை, வெட்டி கடத்துவோரை கண்காணிக்க வேண்டும். வனப்பகுதிகளில் வளரும் மரங்களை வெட்டினால், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், பட்டா நிலத்தில் உள்ள சிறு, பெருமரம் மற்றும் மூங்கில்கள் வெட்டப்படுவதை கண்காணிக்க வேண்டும். வனப்பகுதிகளில் அசம்பாவிதம் தெரியவந்தால், வனச்சரகர்களுக்கு தகவல் அளிக்க மக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X