பொது செய்தி

தமிழ்நாடு

புத்தம் புதுசாகிறது புது பஸ் ஸ்டாண்ட்: 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் மும்முரம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்ட், பி.என்., ரோடு பிச்சம்பாளையத்தில் உள்ளது. பெருமாநல்லுார் வழியாக கோபி, ஈரோடு, அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், சத்தி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள், இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகின்றன. இந்த வளாகம், ஸ்மார்ட்
 புத்தம் புதுசாகிறது புது பஸ் ஸ்டாண்ட்: 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் மும்முரம்

திருப்பூர்;திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்ட், பி.என்., ரோடு பிச்சம்பாளையத்தில் உள்ளது. பெருமாநல்லுார் வழியாக கோபி, ஈரோடு, அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், சத்தி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள், இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகின்றன. இந்த வளாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.பஸ் ஸ்டாண்ட் முன்புறமிருந்த காலியிடத்தில், வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகம், முற்றிலும் கான்கிரீட் தளமாக மாற்றியமைக்கும் வகையிலும், பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவலால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதையடுத்து பஸ் ஸ்டாண்ட் வளாகம், கான்கிரீட் தளமாக மாற்றும் வகையில் பணி மேற்கொள்ளப்பட்டது.தற்போது பஸ்கள் இயக்கப்படுவதால், ஒரு பகுதி முழுவதும் பஸ்கள் செல்ல தடை செய்யப்பட்டு தளம் அமைக்கும் பணி நடந்தது. தற்போது, பஸ்கள் பஸ் ஸ்டாண்டின் முன்புறம் மட்டுமே வந்து செல்கின்றன. இதனால், தளம் அமைக்கும் பணி, இடையூறின்றி நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகம் பாதியளவு கான்கிரீட் தளமாக மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X