புதுடில்லி: டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு, 'மசாஜ்' செய்யும் இயந்திரங்கள் மற்றும் 'பீட்சா' வழங்கப்படுகிறது. இது, போராட்டம் குறித்த கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்கின்றனர். இதன்படி, 'கல்சா எய்ட்' என்ற சர்வதேச தொண்டு நிறுவனம், 400 படுக்கைகளுடன் தண்ணீர் புகாத கூடாரம் அமைத்துள்ளது. இதில், வெந்நீருடன் கூடிய குளியலறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வயதில் மூத்த விவசாயிகளின் கால் வலி போக்க, 25 மசாஜ் இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.இவற்றில் விவசாயிகள், தங்கள் கால்களை மசாஜ் செய்து கொள்கின்றனர். குளிர்காலம் என்பதால், ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மணி நேரத்தில், 2,000 ரொட்டிகளை தயாரிக்கிறது. துணி துவைப்பதற்கு நவீன இயந்திரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தேநீர், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்படும் நிலையில், பாரதிய கிசான் கூட்டமைப்பின் சார்பில் தற்போது, 'பீட்சா' வினியோகம் துவங்கி உள்ளது.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால், இதற்கு எதிரான கருத்துகளை சிலர் பதிவிட்டுள்ளனர்.அதில், 'போராட்டம் என்ற பெயரில், சிலர் வசதியான படுக்கைகள் மற்றும் சிறப்பான உணவை பெறுகின்றனர். இது போராட்டத்தின் நோக்கத்தை கேள்விக்குறி ஆக்குகிறது' என, கூறியுள்ளனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE