சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிச.,12) தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக துறையினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினர். வரும் ஜனவரி மாதம் முதல் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்திருந்தார். அதற்கான பணிகளையும் தற்போது செயல்படுத்தி வருவதால் அவரது பிறந்தநாள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுதும் உள்ள ரசிகர்கள், அவரது பிறந்த நாளை, பல விதமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அரசியலுக்கு
ஆயத்தமாகி வரும் ரஜினிக்கு, இது பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

'தமிழகத்தில் அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்; இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை' என்ற, 'பஞ்ச்' வசனத்தோடு, நடிகர் ரஜினி, அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். இதனை தனது பிறந்தநாள் கேக் மூலமாகவும் வெளிப்படுத்தினார். 'இப்போ இல்லனா எப்பவும் இல்ல' என்பதை வலியுறுத்தும் ஆங்கில வாசக அமைப்பு கொண்ட கேக்கை வெட்டி ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது
நன்றியை தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE