சம்பவம் செய்தி

தமிழ்நாடு

‛டிவி' நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: பெரம்பலூரில் போலீஸ் விசாரணை

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: 'டிவி' சீரியல் நடிகை, சித்ரா தற்கொலை தொடர்பாக, பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த, அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னையைச் சேர்ந்த 'டிவி' சீரியல் நடிகை சித்ரா, 29; கடந்த, 9ம் தேதி செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து,

சென்னை: 'டிவி' சீரியல் நடிகை, சித்ரா தற்கொலை தொடர்பாக, பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த, அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.



latest tamil news


சென்னையைச் சேர்ந்த 'டிவி' சீரியல் நடிகை சித்ரா, 29; கடந்த, 9ம் தேதி செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அவரது கணவர் ஹேம்நாத் உட்பட பலரிடம், மூன்று நாட்களாக விசாரித்தனர். இவரது தற்கொலை குறித்து, திருவள்ளூர் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது. சித்ராவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, சித்ராவின் நட்பு வட்டத்தில், பெரம்பலுார், புதுக்கோட்டையைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, நடிகை சித்ரா, பெரம்பலுாருக்கு எந்த தேதியில் வந்தார், அங்கு பங்கேற்ற விழா, திரும்ப எப்போது சென்னை புறப்பட்டு சென்றார், யார் யாரெல்லாம் அவரை சந்தித்தனர் என்று விசாரித்தனர்.


latest tamil news


பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அவரை சந்தித்தனரா என்பது குறித்தும், பெரம்பலுார் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் உளவுத்துறை போலீசார் விசாரித்து சென்றுள்ளனர். இந்த விசாரணை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
13-டிச-202018:35:07 IST Report Abuse
Swaminathan Chandramouli ஸுஸாந்த் சிங்க் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டாரா கொலை செய்யப்பட்டாரா என்ற விவாதமே இன்னும் முடிவுக்கு வரவில்லை அதற்குள் தமிழ் நாட்டில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வந்து விட்டது இங்கும் அதே விவாதம் ஆரம்பித்து விட்டது சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று பூவா தலையாப்போட ஆரம்பித்துவிட்டனர்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-டிச-202018:02:24 IST Report Abuse
Endrum Indian போலீஸ் வழக்கு பதிவு செய்வது கோர்டுட்க்கு எடுத்துக்கொண்டு போய் இழுத்துக் கொண்டே வருவது ஒரு முடிவே இல்லாமல் ஒரு மனிதத்துவமே இல்லையா. ஒரு நடிகை தற்கொலை இரண்டு நாட்களில் விசாரணை மூன்றாவது நாள் தீர்ப்பு நான்காவது நாள் தண்டனை? வாழ்க்கையில் ஒரு தடவை ஒரு தடவையாவது இப்படி செய்திருக்கின்ரீர்களா. வேடிக்கை என்னவென்றால் இதில் மிக மிக அதிகம் படித்தவர்கள் உள்ள ஒரே இடம். இந்திய நாடு மிக கீழ்நிலையில் போவதற்கு இது ஒன்றே முக்கிய காரணம். ஐயோ படித்த மேதாவிகள் திருந்துங்கள் சட்டம் தீர்ப்பு மக்களின் நன்மைக்காக அவர்கள் திருத்துவதற்காக ஆனால் நீங்கள் செய்வது பார்த்தால் தவறு செய்தவர்கள் தப்பிக்க மட்டுமே உதவுகின்றது.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
13-டிச-202017:15:36 IST Report Abuse
mindum vasantham பெரம்பலூர் யார் என்று புரிகிறதா தீயென தெரிகிறதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X