பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருச்சி: 'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பின் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.பூலோக வைகுண்டம்என போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், நாளை துவங்கி ஜனவரி, 4ம் தேதி வரை நடக்க உள்ளது.வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான
srirangam, sorgavasal, devotees, not allowed, ஸ்ரீரங்கம், சொர்க்க வாசல், பக்தர்கள், அனுமதி, இல்லை

திருச்சி: 'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பின் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பூலோக வைகுண்டம்என போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், நாளை துவங்கி ஜனவரி, 4ம் தேதி வரை நடக்க உள்ளது.வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்ற, பரமபத வாசல் திறப்பு நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக, 24ம் தேதி மாலை, 6:00 முதல், 25ம் தேதி காலை, 8:00 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


latest tamil news


நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய பின், காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.பகல்பத்து உற்சவ நாட்களில், நம்பெருமாள் புறப்பாடு நடைபெறும் போது, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய உடன், காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.ஜனவரி, 1ம் தேதி வேடுபறி உற்சவம் நடக்கும் போது, பகல், 12:30 முதல் மாலை, 5:00 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என, திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-டிச-202010:35:44 IST Report Abuse
நக்கல் அரசு விதிமுறைகளை பின்பற்ற சொல்லிவிட்டு மக்களை அனுமதிக்கவேண்டும்... முடிவில் தீர்ப்பு அப்படித்தான் வரும்...
Rate this:
Cancel
Mal - Madurai,இந்தியா
13-டிச-202010:11:36 IST Report Abuse
Mal If covid restrictions are there for devotees in temples in tamilnadu then the same should be applied to all churches for christmas too..nobody should be allowed in churches too...
Rate this:
Cancel
13-டிச-202009:32:11 IST Report Abuse
ஆப்பு இந்த வருஷம் யாருக்கும் சொர்க்கம் / வைகுண்டம் இல்லை.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
13-டிச-202012:38:53 IST Report Abuse
Balajiநீ கவலைப்படாத.. ஒனக்கு நிச்சயம் உண்டு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X