புதுடில்லி: ஒரு அமர்வில், தலா, 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி வினியோக முறை குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவுக்கான தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கான திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு அமர்வில், தலா, 100 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது; இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்படலாம். முதல் கட்டமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடும் ஒரு அமர்வில், ஐந்து பேர் இடம் பெற்றிருப்பர். இதில், ஒருவர் தடுப்பூசி போடும் டாக்டர் அல்லது நர்சாக இருப்பார். மற்ற நான்கு பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் ஆவணங்களை சரிபார்ப்பர். தடுப்பூசி போடுவதற்கான அமர்வுகளை, சம்பந்தப்பட்ட மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்யும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE