பொது செய்தி

இந்தியா

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020
Share
Advertisement
திங்கள் முதல் ஞாயிறு வரை (14.12.2020 - 20.12.2020 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் செவ்வாய், குரு, சந்திரன் சாதக நிலையில் உள்ளனர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.அசுவினி: எல்லோரிடம் கனிவாகப் பழகுவீர்கள். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பெண்களின் பலகால எதிர்பார்ப்புகள்
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

திங்கள் முதல் ஞாயிறு வரை (14.12.2020 - 20.12.2020 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


செவ்வாய், குரு, சந்திரன் சாதக நிலையில் உள்ளனர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.
அசுவினி: எல்லோரிடம் கனிவாகப் பழகுவீர்கள். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பெண்களின் பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகிழ்ச்சியுடன் எதையும் செய்வீர்கள்
பரணி: சுபநிகழ்ச்சிகளில் உங்களின் விருப்பங்கள் கைகூடும். சிலருக்கு காதல் வெற்றி பெறும். இளைஞர்களின் கவலை தீரும். கலைத்துறையினர் முயற்சியை அதிகரித்தால் நற்பலன் பெறலாம்.
கார்த்திகை 1: வாகனம், வீடு மூலம் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மின்சாதனங்கள் வாங்குவீர்கள். முன்பிருந்த மன உளைச்சல், மறதி தீரும். பெண்களுக்கு நிம்மதியும், அமைதியும் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 14.12.2020 காலை 6:00 - நள்ளிரவு 12:39 மணி


ரிஷபம்



latest tamil news


புதன், குரு, சந்திரனால் நற்பலன் உண்டு. சூரியன் வழிபாடு வளம் தரும்.
கார்த்திகை 2,3,4: மாமன் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். பிள்ளைகளுக்கான கல்விச்செலவு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.
ரோகிணி: சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த வெற்றி காரணமாக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மகள், மருமகன் மூலம் சந்தோஷமான செய்தி வரும். வியாபாரிகள் அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: வரவும், செலவும் சமமாக இருக்கும். அலுவலகத்தில் உயர்ந்த இடத்தை நோக்கிச் செல்வீர்கள். கூடுதல் உழைப்பால் ஏற்பட்ட சிரமங்கள் குறையும். நட்பு வட்டம் விரியும்.
சந்திராஷ்டமம்: 14.12.2020 நள்ளிரவு 12:40 - 17.12.2020 அதிகாலை 4:54 மணி


மிதுனம்


ராகு, கேது, சந்திரன் நன்மைகளை வழங்குவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
மிருகசீரிடம் 3,4: பெண்களுக்கு பொருட்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சி சம்பந்தமான விஷயங்களில் ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் கைகூடும்.
திருவாதிரை: பணியிடத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பண வரவு எப்போதும்போல் இருக்கும். இளைஞர்கள் வாழ்வில் எதிர்கால உயர்வுக்கான வழியை யோசித்தால் நல்லது.
புனர்பூசம் 1,2,3: வியாபாரிகள் புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான வாரம் இது. தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களை மேலதிகாரி பாராட்டுவார் என்று இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 17.12.2020 அதிகாலை 4:55 - 19.12.2020 காலை 11:21 மணி


கடகம்


குரு, புதன், சந்திரன் அனுகூல பலனை தருவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
புனர்பூசம் 4: பணப்பற்றாக்குறையால் கைமாற்று வாங்க வேண்டி வரலாம். அதனால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். சிறிய மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். தனியாகவோ, கூட்டாகவோ. தொழில் தொடங்கும் யோகம் உள்ளது.
பூசம்: வியாபாரிகளுக்கு ஓரளவே லாபம் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருந்தாலும் நன்றாகவே நடக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ஆயில்யம்: எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு தாமதமாகவே கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை அமையும். பெண்கள் பிள்ளைகள் நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 19.12.2020 காலை 11:22 மணி - 20.12.2020 நாள் முழுவதும்


சிம்மம்

செவ்வாய், சுக்கிரன், சூரியன் அதிர்ஷ்டகரமான பலன்களை தருவர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
மகம்: அவசரத் தேவைக்காக கடன் வாங்க வேண்டி வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து வேலையில் சேர அழைப்பு வரும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
பூரம்: பயணம் செல்ல இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். குடும்ப விவகாரங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பீர்கள். தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.
உத்திரம் 1: மனதிற்கு பிடித்தமானவர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் கடின உழைப்பால் மேலதிகாரியிடம் நற்பெயர் பெறுவீர்கள்.


கன்னி


குரு, சந்திரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
உத்திரம் 2,3,4: உடனிருப்போரை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெண்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
அஸ்தம்: அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் பெண்கள் எரிச்சல் அடையலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை எளிதாக சமாளிப்பீர்கள்.
சித்திரை 1,2: மேலதிகாரியுடன் மோதல் போக்கு காட்ட வேண்டாம். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் கடன்கள் சற்று குறையும். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.


துலாம்

செவ்வாய், புதன், சந்திரன் கூடுதல் நற்பலன்களை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
சித்திரை 3,4: மனதிற்கு நெருக்கமானவருடன் மகிழ்ச்சியாகப் பொழுது போகும். இளைஞர்களுக்கு சிறு சிறு வெற்றிகள் ஏற்படும். பெற்றோரிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். நட்பு வட்டம் விரியும்.
சுவாதி: பிரபலமான ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பணியிடத்திலும், சமூகத்திலும் உங்களின் செல்வாக்கு கூடும். பெண்களின் முயற்சிகள் நிறைவேறும்.
விசாகம் 1,2,3: நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். உடல் நலனில் உண்டாகும் பாதிப்பால் மருத்துவ செலவு ஏற்படும். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள்.


விருச்சிகம்


சூரியன், சந்திரன், சுக்கிரன் அனுகூல பலனைத் தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
விசாகம் 4: உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். விருப்பத்துக்கு விரோதமான கொள்கைகளை மாற்ற வேண்டி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அனுஷம்: வேலைப்பளு கூடுவதால் அதிக நேரம் உழைக்க முடியாமல் போகும். இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கேட்டை: வேற்று மொழி பேசுபவரால் நன்மை ஏற்படும். பணியாளர்கள் வழக்கத்துக்கு அதிகமாக உழைப்பீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான வாரம். பொதுநல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டு பெறுவீர்கள்.


தனுசு


சந்திரன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
மூலம்: அனுபவசாலிகளின் உதவியால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெண்கள் புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பணியாளர்களுக்கு சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரரால் ஆதாயம் உண்டு.
பூராடம்: வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். நல்லவர்களின் உதவியை பெறுவீர்கள். எதிர்பாலினத்தவர்களின் நட்பு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களுக்கு சில நாட்களாக காணாமல் போயிருந்த நிம்மதி மீளும்.
உத்திராடம் 1: சுபநிகழ்ச்சிக்கான முயற்சிகளில் பலன் உண்டாகும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் சற்று அதிகரிக்கும்.


மகரம்


குரு, புதன், சந்திரனால் நன்மை கிடைக்கும். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
உத்திராடம் 2,3,4: பயணத்தால் சிறிய நன்மை ஏற்படும். வருமானம் பெருகும். உறவினர் மூலம் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் குறையும். கலைஞர்கள் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.
திருவோணம்: எதையாவது கற்பனை செய்து வீண் குழப்பம் அடையாதீர்கள். அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பது அவசியம். உங்களது பணிகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
அவிட்டம் 1,2: சிலருக்கு எதிர்பாராமல் நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். பிறர் குடும்ப விஷயங்களில் அறிவுரை சொல்லாமல் இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு மனஅழுத்தம், எரிச்சல் வந்து நீங்கும்.


கும்பம்


புதன், சுக்கிரன், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.
அவிட்டம் 3,4: சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். நினைக்க இயலாத யோகங்கள் வரலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள்.
சதயம்: குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து அனுகூல செய்தி வந்துசேரும். நட்பால் ஆதாயம் உண்டு.
பூரட்டாதி 1,2,3: மாமன், மைத்துனர் குடும்பங்களோடு ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். எதிர்பாராத விரயங்கள் உருவாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை கூடும்.


மீனம்


குரு, புதன், ராகு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
பூரட்டாதி 4: வெளியூரில் உள்ள பிள்ளைகள் மூலம் நற்செய்தி ஒன்று வரும். வேலை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகி நல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகுவதால் லாபம் பார்ப்பீர்கள்.
உத்திரட்டாதி: தந்தையுடன் மனவருத்தங்கள் வந்து நீங்கும். யாருடன் பேசினாலும் கறாராகப் பேசுவீர்கள். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் குணமடைந்து வீடு திரும்புவார்கள். பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.
ரேவதி: வாரக் கடைசியில் அவசர வெளியூர் பயணம் ஒன்று இருக்கும். எது செய்தாலும் அதனால் நற்பலன் கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கும். பணியாளர்கள் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X