சேலம்: பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய மேல் விசாரணையில், 'திடுக்' தகவல் வெளியாகி உள்ளது.
சேலம், கலெக்டர் அலுவலகத்தில், மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனராக இருந்தவர் கனகராஜ், 57. இவரிடம், நேற்று முன்தினம், கணக்கில் வராத, 3.50 லட்சம் ரூபாயை, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கோவை, பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில், கோவை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேஷ் தலைமையில் போலீசார், விடிய விடிய, நேற்று காலை, 6:00 மணி வரை சோதனை நடத்தினர். காரமடை ஒன்றியத்தில், கனகராஜ் மனைவி தங்கமணி, பொறியாளராக வேலை பார்ப்பது தெரியவந்தது. கணக்கில் வராத பணம் வைத்திருந்ததாக, கனகராஜ் மீது, வழக்குப்பதிந்த போலீசார், மேல் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: மண்டலத்துக்கு உட்பட்ட, சேலம், நாமக்கல்லில், 52 பேரூராட்சிகளில், சிறப்பு, தேர்வுநிலை பேரூராட்சி, 26க்கு, சிறப்பு அதிகாரியாகவும் கனகராஜ் உள்ளார். அதனால், மாத செலவுக்கு, ஒப்புதல், சிறப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்க, 26 பேரூராட்சிகளில், வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், ஒப்பந்த பணிக்கு, அங்கீகாரம் அளித்தல், இதர பேரூராட்சிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான செலவினத்துக்கு அனுமதி வழங்குதல், தெருவிளக்கு, சாலைப்பணி, சி.எப்.எல்., பல்பு கொள்முதல் என, அனைத்து பணிகளிலும், வருமானம் பார்த்துள்ளார். குறிப்பாக, ?ஹமாஸ் விளக்கு வாங்கியதில், பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. அதில் சம்பாதித்த, கணக்கில் வராத பணத்தை எடுத்து சென்ற போது தான், கனகராஜ் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE