வாக்காளராக 69 ஆயிரம் புதுமுகம் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளராக 69 ஆயிரம் புதுமுகம் ஆர்வம்

Added : டிச 13, 2020
Share
சேலம்: மாவட்டத்தில், மூன்று சிறப்பு முகாமுடன் சேர்ந்து, இதுவரை வாக்காளராக சேர, 69 ஆயிரத்து, 909 புதுமுகங்கள் விண்ணப்பித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த நவ., 16ல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்தம், 3வது முகாம், நேற்று நடந்தது. 1,163 மையங்களில், 3,277 ஓட்டுச்சாவடிகளில் நடந்த முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, தொகுதிக்குள் மாற்றம் செய்வதற்கான

சேலம்: மாவட்டத்தில், மூன்று சிறப்பு முகாமுடன் சேர்ந்து, இதுவரை வாக்காளராக சேர, 69 ஆயிரத்து, 909 புதுமுகங்கள் விண்ணப்பித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த நவ., 16ல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்தம், 3வது முகாம், நேற்று நடந்தது. 1,163 மையங்களில், 3,277 ஓட்டுச்சாவடிகளில் நடந்த முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, தொகுதிக்குள் மாற்றம் செய்வதற்கான படிவம் தனித்தனியே வழங்கி, பூர்த்தி செய்து, அதை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், திரும்ப பெற்றனர். முகாமில், பெயர் சேர்க்க, 17 ஆயிரத்து, 733 பேர், நீக்க, 10 ஆயிரத்து, 908 பேர், திருத்தம் செய்ய, 2,669 பேர், தொகுதிக்குள் மாற்றம் செய்ய, 2,006 பேர் என, 33 ஆயிரத்து, 316 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சம் இடைப்பாடியில் பெயர் சேர்க்க, 2,126 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X