பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளின் சுமையை குறைக்கவே புதிய சட்டங்கள்; மோடி சகோதரர் பிரகலாத் பேட்டி

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை: ''விவசாயிகளின் சுமையை குறைக்கவே புதிய சட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்,'' என, மதுரையில் பிரதமர் மோடியின் சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜ்னா அமைப்பின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி தெரிவித்தார்.மதுரையில் நடந்த அந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பிரகலாத் மோடி கூறியதாவது: நடிகர் ரஜினிக்கு என் தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் பிறந்தநாள்
FarmLaws, Modi, Brother, வேளாண் சட்டங்கள், மோடி, சகோதரர்

மதுரை: ''விவசாயிகளின் சுமையை குறைக்கவே புதிய சட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்,'' என, மதுரையில் பிரதமர் மோடியின் சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜ்னா அமைப்பின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி தெரிவித்தார்.

மதுரையில் நடந்த அந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பிரகலாத் மோடி கூறியதாவது: நடிகர் ரஜினிக்கு என் தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பிரதமராகியுள்ளார் மோடி. அதனால் தான் ஏழ்மையான மக்களுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்த அல்லும், பகலும் மோடி பாடுபடுகிறார். பிரதமரின் திட்டங்களை மக்களிடமிருந்து துாரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. பிரதமரின் திட்டங்களை ஏழைகளிடம் கொண்டு சேர்க்கும் எங்கள் அமைப்பில் 22 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பல உறுப்பினர்களை சேர்க்கவுள்ளோம்.


latest tamil news
ஜன்கல்யாண்கரி யோஜ்னா திட்டத்தை அனைவருக்கும் கொண்டு போய் சேர்ப்போம். அத்துடன் 40 பிரதான் மந்திரி யோஜ்னா திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.தமிழக மக்கள் குறிப்பாக மதுரை மக்கள் பாசமானவர்கள். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி. விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அது கீழ்மட்டம் வரை செல்வதில்லை. ஒரே நாளில் அடித்தட்டு மக்களிடம் இத்திட்டங்களை கொண்டு போக முடியாது, என்றார். அமைச்சர் செல்லுார் ராஜு மற்றும் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
13-டிச-202019:18:50 IST Report Abuse
Raj தேவையில்லாத சட்டம்
Rate this:
Cancel
M selvam - Namakkal,இந்தியா
13-டிச-202018:50:18 IST Report Abuse
M selvam விடமாட்டார்கள்
Rate this:
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-202014:14:24 IST Report Abuse
ganesh The protestor getting spa, dry-fruits, sanitized beds and pizza including 500Rs (per day), so this will go like CAA one month after will back to normal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X