ஈரோடு: தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி எம்பிளாயீஸ் அன்ட் கான்ட்ராக்ட் லேபரர்ஸ் யூனியன், பன்னாட்டு பொதுத்துறை கூட்டமைப்பு (பி.எஸ்.ஐ.,) சார்பில், மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறுத்திடக்கோரி, ஈரோட்டில் கருத்தரங்கம் நடந்தது. ஈரோடு மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தலைவர் தங்கராஜ், மாநில ஐ.என்.டி.யு.சி., தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பேசினர். இதில் தெற்காசிய மண்டல செயலாளர் கண்ணன் பேசியதாவது: மின்சார சட்ட திருத்த மசோதாவில் உள்ள குறைபாடுகள் குறித்து, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள், பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். ஆனால், எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. இச்சட்டத்தால், புதிய மின் உற்பத்தி தனியாரிடம் ஒப்படைக்க வழி செய்கிறது. தற்போதைய மின் உற்பத்தியில், 20 சதவீதத்தை பெரிய தனியார் நிறுவனங்கள் செய்து வருகிறது. இதன் மூலம், மின் கட்டணம் கட்டுக்கடங்காத வகையில் உயரும். விவசாயம், வீடு, தொழில்களுக்கான மானியம், மின் கட்டண சலுகை, மின் பயன்பாட்டில் சலுகை நிறுத்தப்படும். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு பேசினார். புதிய மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE