ஈரோடு: ஈரோடு மண்டல, அரசு போக்குவரத்து கழக, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்தது. மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் பேசினர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிக்கு அண்ணா தொழிற்சங்கம் முழு அளவில் ஈடுபடுவது, என தீர்மானம் நிறைவேற்றினர். அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் ராஜு, பொருளாளர் அப்துல் ஹமீது, இணை செயலாளர் துளசிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE