பொது செய்தி

தமிழ்நாடு

பேச்சுவார்த்தை துவங்காவிட்டால் 17ம் தேதி முதல் வேலை நிறுத்தம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
ஈரோடு: ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னை குறித்து, வரும், ??ம் தேதி பேச்சுவார்த்தை துவங்காவிட்டால், 17 முதல் அரசு போக்குவரத்து பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சி.ஐ.டி.யு., மாநிலக்குழு உறுப்பினர் முருகையா கூறியதாவது: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, 2019 செப்.,1 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கி

ஈரோடு: ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னை குறித்து, வரும், ??ம் தேதி பேச்சுவார்த்தை துவங்காவிட்டால், 17 முதல் அரசு போக்குவரத்து பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சி.ஐ.டி.யு., மாநிலக்குழு உறுப்பினர் முருகையா கூறியதாவது: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, 2019 செப்.,1 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 15 மாதமாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அரசு, போக்குவரத்து கழகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி, நோட்டீஸ் வழங்கியுள்ளோம். கொரோனாவை காரணம் கூறி, 100 சதவீதம் பஸ் இயக்காததாலும், தனியாருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாலும், கடும் நஷ்டத்தில் போக்குவரத்து கழகம் உள்ளது. ஓய்வு பெற்றவர்களின் பண பயன்கள், 7,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது பணியில் உள்ளவர்களுக்கு மூன்று டி.ஏ.,க்கள் வழங்காததால், ஒவ்வொரு ஊழியருக்கும், 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டி.ஏ., நிலுவை உள்ளது. தற்போது தனியார் பஸ்களுக்கு ஆதரவு தருவதுபோல, அரசு பஸ்களை இயக்காமல் தாமதிக்கின்றனர். விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வரவுள்ளதால், மேலும் சில மாதம் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தள்ளிப்போடும் எண்ணத்துடன், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். இம்முறை தொழிற்சங்கங்கள் தெளிவான முடிவுடன் உள்ளோம். வரும், 15ல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவ்வாறின்றி ஏதாவது காரணம் கூறி தள்ளிப்போட்டால், 17ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை துவங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X