அரூர்: தி.மு.க., வேட்பாளர் போட்டியிட, அரூர் (தனி) தொகுதியை, வாங்கி கொடுப்பேன்' என, தி.மு.க., - எம்.பி.,யின் பேச்சு, கூட்டணி கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூரில், தி.மு.க., சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற, தேர்தல் பிரசாரம் நேற்று துவங்கியது. இதில், இணையதள உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் பேசுகையில், ''லோக்சபா தேர்தலில், எனக்கு, 42 ஆயிரம் ஓட்டுக்களை கூடுதலாக பெற்றுக்கொடுத்த தொகுதி அரூர். வரும் தேர்தலில், அரூர் (தனி) தொகுதி, தி.மு.க.,வுக்கு கிடைக்க, மாவட்ட செயலாளர், நிர்வாகிகளுடன் பேசி பெற்றுத்தருவது என் பொறுப்பு,'' என்றார். எம்.பி.,யின் இந்த அதிரடி பேச்சால், கூட்டணியில், அரூர் தொகுதியை எதிர்பார்த்துள்ள இரண்டு கம்யூ., மற்றும் வி.சி., கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE