பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்தில், 2.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமாகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் கட்டடங்கள், ஆய்வகம், குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து வைத்து, நாகமரை ஊராட்சி குருக்கலையனூர் புதிய அங்கன்வாடி மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஆர்.டி.ஓ., தணிகாசலம் தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE