ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்ற, 11 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி டவுன், காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, பாரூர், அஞ்செட்டி, மத்தூர், சிங்காரபேட்டை போலீசார், தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது, குட்காவை பதுக்கி வைத்து விற்ற, கிருஷ்ணகிரி பழைய சப்ஜெயில் ரோட்டை சேர்ந்த சுப்பிரமணி, 60, ஜோதி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சரவணன், 38, காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த மகேந்திரகுமார், 32, குருபரப்பள்ளி சோமநாதபுரத்தை சேர்ந்த முகமதுசித்திக், 50, அதே பகுதியை சேர்ந்த சுகேல் ஷெரீப், 24, பாரூர் அரசம்பட்டியை சேர்ந்த முருகன், 53, தேன்கனிக்கோட்டை அடுத்த பஞ்சேஸ்வரத்தை சேர்ந்த பாபு, 30, அஞ்செட்டி அடுத்த தாம்சனப்பள்ளியை சேர்ந்த சிவராஜ், 47, தளி மஜீத்தெருவை சேர்ந்த ஹரிஹரன், 34, மத்தூர் கீழ் வீதியை சேர்ந்த பாபு, 43, சிங்காரப்பேட்டை குருகப்பட்டியை சேர்ந்த சிங்காரவேல், 38, ஆகிய, 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 680 ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE