பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக உழவர் முன்னணி மறியல்: 75 பேர் கைது

Added : டிச 13, 2020
Share
Advertisement
ஓசூர்: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ராயக்கோட்டையில் உள்ள, ஓசூர் - தர்மபுரி சாலையில், தமிழக உழவர் முன்னணி சார்பில், நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். திடீர் மறியலால், தர்மபுரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராயக்கோட்டை

ஓசூர்: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ராயக்கோட்டையில் உள்ள, ஓசூர் - தர்மபுரி சாலையில், தமிழக உழவர் முன்னணி சார்பில், நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். திடீர் மறியலால், தர்மபுரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட தமிழக உழவர் முன்னணி மாநில பொதுச்செயலாளர் தூர்வாசன் மற்றும் மாநில ஆலோசகர் மாரிமுத்து உட்பட, 75 பேரை கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட அனைவரும், மதியம் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X