வேலூர்: வேலூரில், குற்றச்செயல்களில் வட மாநிலத்தவர் ஈடுபட்டு வருவதால், நகரத்திலுள்ள, 500 தங்கும் விடுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர். வேலூரில், கடந்த மூன்று மாதமாக, 100க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது. போலீசார் விசாரணையில், பீஹார், ஒடிசா, உ.பி., போன்ற வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வருவது போல நடித்து, வேலூரிலுள்ள தங்கும் விடுதிகளில் தங்கி, திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில், 100 போலீசார் வேலூரிலுள்ள, 500 தங்கும் விடுதிகளில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விடுதியில் தங்க வருவோரின், ஆதார் எண், மொபைல்போன் எண், விலாசம் போன்ற விபரங்களை சேகரித்த பிறகே, அனுமதிக்க வேண்டும், இதை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE