சேலம்: மோடியின் சகோதரர், சேலம் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தார். பிரதமர் மோடியின் இளைய சகோதரர், பிரதம மந்திரி மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்க, அகில இந்திய தலைவர் பிரகலாத் மோடி, நேற்று சேலம் வந்தார். குரங்குச்சாவடியில் உள்ள, சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில், குழுவினருடன் வழிபாடு நடத்தினார்.
இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் தொன்று தொட்டு இருந்து வரும் பழமையான பகுதி. இங்கு வருவதில் பெருமை கொள்கிறேன். இங்கு, 600 ஆண்டுக்கு மேலாக சவுராஷ்டிரா மக்கள் வாழ்ந்து வருவது மகிழ்ச்சி. மத்திய அரசின் திட்டங்களை, கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க, பிரதம மந்திரி மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் செயல்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேசிய பின், மதுரை புறப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE