சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 டன் ஹான்ஸ், லாரி பறிமுதல்: ஆத்தூர் டிரைவருக்கு காப்பு

Added : டிச 13, 2020
Share
Advertisement
சேலம்: சேலத்தில், 2 டன் ஹான்ஸ் உள்ளிட்டவற்றை, லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார், ஆத்தூரை சேர்ந்த டிரைவரை கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து, போதை வஸ்து சேலத்துக்கு கடத்தி வருவதாக, போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதனால், கருப்பூர், சுங்கச்சாவடியில், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார், நேற்று காலை, 5:30 மணிக்கு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சேலம்: சேலத்தில், 2 டன் ஹான்ஸ் உள்ளிட்டவற்றை, லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார், ஆத்தூரை சேர்ந்த டிரைவரை கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து, போதை வஸ்து சேலத்துக்கு கடத்தி வருவதாக, போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதனால், கருப்பூர், சுங்கச்சாவடியில், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார், நேற்று காலை, 5:30 மணிக்கு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 'ஜோஸ்த்' பெயரில் வந்த மினி லாரி நிற்காமல் சென்றது. போலீசார், பின் தொடர்ந்து, விரட்டி சென்று மடக்கினர். சோதனையில், 20 மூட்டைகளில் ஹான்ஸ், தலா, 10 அட்டை பெட்டியில், பான்பராக் பான்மசால் தனித்தனியே பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை, 2 டன். மதிப்பு, 6 லட்சம் ரூபாய். விசாரணையில், டிரைவர், உரிமையாளர், சேலம் மாவட்டம், ஆத்தூர், அக்கிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த, ராஜி மகன் மனோகரன், 32, என தெரிந்தது. அத்துடன், பல ஆண்டாக, போதைவஸ்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின், லாரியுடன், பான்பராக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மனோகரனை கைது செய்த போலீசார், ஊர் வாரியாக, போதைவஸ்து, மொத்த, சில்லரை வியாபாரிகள் பட்டியல் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X