தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுாரை சேர்ந்த பொன் வினோத் குமார், நிர்மலா தம்பதியின் மகன் பொன் சர்வேஷ்.
நான்கு வயதாகும் இவர், 3 வயதுக்குள் ஞாபகத்திறனுக்காக பல்வேறு பட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே டிஸ்கவரி சேனலில் வரும் விலங்குகளின் பெயர்களையும் தெரிந்து கொண்டு சொல்லத் துவங்கினார். கோல்டன் லயன் மர்மோஸ்ட், டாஸ்மானியன் டெவில், சைகா ஆண்டிலோப் போன்ற விலங்குகளின் பெயர்களை சிறந்த உச்சரிப்போடு சொல்லும் திறன் பெற்றுள்ளார்.
சிறுவனின் திறமையை வியந்து இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. தன்முன் வைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட பொம்மைகள், உருவங்களை பார்த்துவிட்டு பின்னர், கண்களை கட்டிக்கொண்டு பார்க்காமலேயே தடவி உணர்ந்து அவற்றின் பெயர்களை கூறும் திறமை பெற்றுள்ளார்.உலக நாடுகள் வரைபடத்தை பார்த்து 55க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்களை கூறுகிறார். பிரமிடு ஆப் கிசா, சிட்னி ஒபேரா ஹவுஸ் உள்ளிட்ட முக்கியஇடங்களையும் சொல்கிறார். காயத்ரி மந்திரம் உள்ளிட்ட ஸ்லோகங்களையும் மனப்பாடமாக கூறுகிறார். இவரின் பெயர் நோபல் வேர்ல்ட் புக்ஸ் ஆப் ரெகார்ட், கோஹினூர் வேர்ல்ட் புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் இடம்பிடித்துள்ளது. இவற்றிற்காக "மெமரி கிட்" என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
முப்ஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE