பொது செய்தி

தமிழ்நாடு

வா வா என்றழைக்கும் வாழை இலை தட்டு இட்லி

Added : டிச 13, 2020
Share
Advertisement
மதுரை என்றதும் மல்லிகை நினைவுக்கு வந்து விடும். மல்லிகை பூ இட்லியும் நினைவுக்கு வரும். துாங்காநகரான மதுரையில் 24 மணி நேரமும் சுடான இட்லியை எங்காவது ருசிக்க முடியும். அந்தளவுக்கு மல்லிகை பூ போன்ற வெள்ளை நிறத்தில் மெதுவான இட்லி, சட்னி, சாம்பார் மதுரையில் பிரசித்தம். இட்லியில் பல வகைகள் உண்டு. சாதாரண இட்லி, சாம்பார் இட்லி, மினி இட்லி, பொடி இட்லி, சினை இட்லி என அடுக்கி கொண்டே
வா வா என்றழைக்கும் வாழை இலை தட்டு இட்லி

மதுரை என்றதும் மல்லிகை நினைவுக்கு வந்து விடும். மல்லிகை பூ இட்லியும் நினைவுக்கு வரும். துாங்காநகரான மதுரையில் 24 மணி நேரமும் சுடான இட்லியை எங்காவது ருசிக்க முடியும். அந்தளவுக்கு மல்லிகை பூ போன்ற வெள்ளை நிறத்தில் மெதுவான இட்லி, சட்னி, சாம்பார் மதுரையில் பிரசித்தம். இட்லியில் பல வகைகள் உண்டு. சாதாரண இட்லி, சாம்பார் இட்லி, மினி இட்லி, பொடி இட்லி, சினை இட்லி என அடுக்கி கொண்டே செல்லலாம். நகரத்தார் வீடுகளில் பரிமாறப்படும் மறந்து போன தட்டு இட்லி தற்போது மதுரையில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கே.கே.நகர் வணிக வளாகத்திலுள்ள ரோல்ஸ் உணவகம் தட்டு இட்லியை சுட சுட தயாரித்து பரிமாறுகிறது. குறைந்த கட்டணத்தில் தட்டு இட்லி, பிளேன் தட்டு இட்லி, கீ சாம்பார் தட்டு இட்லி, வாழை இலை தட்டு இட்லி என பல ருசியான இட்லியை இங்கு ருசிக்கலாம். இதற்கான பிரத்யேக இட்லி சட்டியில் ஊத்தப்பம் அளவுக்கு சற்று கடினமாக இட்லியை ஆவியில் வேக வைத்து இரு வகை சட்னி, சாம்பாருடன் பரிமாறப்படுகிறது. அதுபோல சுடப்படும் தட்டு இட்லியை மசாலா, கிரேவியுடன் சேர்த்து வாழை இலையில் மடித்து வைத்து தோசை கல்லில் சூடுபடுத்த வாழை இலை தட்டு இட்லி ரெடி.ரோல்ஸ் உணவக நிறுவனர் ரவி பார்த்தசாரதி, ''மதுரைவாசிகளுக்கு மண் மணம் மாறாமல் ருசிக்க வாய்ப்பு தரும் வகையில் தட்டு இட்லி 'கான்செப்ட்டை' எடுத்தேன். எதிர்பார்த்ததைவிட மக்களிடம் வரவேற்பு.

தினமும் மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை தட்டு இட்லியை இங்கு ருசிக்கலாம். விடுமுறை நாட்களில் தட்டு இட்லியை ருசிக்க கூட்டம் வந்தபடி இருக்கும். பொதுவாக இட்லி எல்லோருக்குமே ஏற்றது. அந்த இட்லியை நம் பாரம்பரிய சுவையுடன் தருவதால் வரவேற்பு ஜாஸ்தி,'' என்றார்.தட்டு இட்லியை ருசிக்க 88386 20100.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X