பொது செய்தி

தமிழ்நாடு

பூக்களே ஓவியமாய்

Added : டிச 13, 2020
Share
Advertisement
பென்சில், பேனா, பெயின்ட், பிரஷ் இல்லாமல் பூக்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்துகிறார் மதுரை பைகாரா அழகுசுந்தரம் நகரைச் சேர்ந்த கீதா.பைன் ஆர்ட்ஸ் படித்து டெய்லரிங், பெயின்டிங் கற்றுத் தேர்ந்தாலும் காலப்போக்கில் கணவன், குடும்பம், பேரப்பிள்ளை வரை வாழ்க்கை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கீதாவுக்கு, கொரோனா தனிமை பயத்தை விட்டுச் சென்றது. மாதம் ஒரு முறை மகள் வீட்டுக்குச்
பூக்களே  ஓவியமாய்

பென்சில், பேனா, பெயின்ட், பிரஷ் இல்லாமல் பூக்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்துகிறார் மதுரை பைகாரா அழகுசுந்தரம் நகரைச் சேர்ந்த கீதா.

பைன் ஆர்ட்ஸ் படித்து டெய்லரிங், பெயின்டிங் கற்றுத் தேர்ந்தாலும் காலப்போக்கில் கணவன், குடும்பம், பேரப்பிள்ளை வரை வாழ்க்கை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கீதாவுக்கு, கொரோனா தனிமை பயத்தை விட்டுச் சென்றது. மாதம் ஒரு முறை மகள் வீட்டுக்குச் சென்று சந்தோஷமாக வீடு திரும்பிய கீதாவுக்கு, கொரோனாவால் வெளியே செல்ல முடியவில்லை. தன்னிலையில் மூழ்கி கிடக்காமல் படித்த பழைய விஷயங்களை மீட்டெடுத்தார். இன்று அவரது பூ, இலையால் ஆன ஓவியங்கள் காண்போரை கவர்ந்திழுக்கின்றன என்கிறார் கீதா.

வீட்டிலேயே போரடித்து கிடந்ததால் என்ன செய்வதென யோசித்தேன். எங்கள் உறவினர் பெண் பூக்களால் ஆன ஓவியம் தந்தாள். அதைப் பார்த்ததும் சங்குபுஷ்ப பூக்களால் ஆன மயில் செய்தேன். அடுத்த வீட்டு பலாமரத்தின் இலைகள் எங்கள் காம்பவுண்டில் விழுந்து கிடந்ததைப் பார்த்த போது, புதுவகை ஓவியம் உருவாக்க முயற்சி செய்தேன். இயற்கை காட்சி, கடவுள் உருவங்களை காய்ந்த இலை மற்றும் பிரெஷ் பூக்களைக் கொண்டு உருவாக்கினேன். என்ன ஓவியம் வரைய நினைக்கிறேனோ அதை முதலில் மனதில் பதித்துக் கொள்வேன். அதன் பின் மார்பிள் கல்லில் சித்திரமாக்கினேன்.

ஓவியம் வரைந்து பூக்களை ஒட்டவில்லை. பூ, இலைகளைக் கொண்டு கையால் வரைந்து உயிர் கொடுத்தேன். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது வரை இயற்கை காட்சி, கஜேந்திர மோட்சம், கீதாபோதேசம், சூரியபகவான், மீரா, வெங்கடாஜலபதி படங்களை உருவாக்கினேன். மார்பிள் கல்லில் பூ, இலைகளை அப்படியே வைத்த போது சிறிது காற்றடித்தாலும் பறந்து விட்டது. அதனால் பூ, இலைகளை ஒட்டி வைக்க ஆரம்பித்தேன். எனக்கே எனக்கான பொழுதுபோக்கு முயற்சி இப்போது மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு உள்ளது.

சங்குபுஷ்பம், ஊதுகுழாய், பிச்சிப்பூ, வீட்டில் உள்ள பிற பூக்கள், இலைகளைத் தான் சித்திரத்திற்கு பயன்படுத்துகிறேன். பூக்கள் பிரெஷாக இருக்கும் போது சித்திரம் மிக அழகாக இருக்கும். மறுநாள் காய்ந்துவிடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சித்திரத்தை மாற்றி வரைவேன். மற்ற ஓவியங்களைப் போல இதை பாதுகாக்கமுடியாது. ஆனாலும் ஆத்ம திருப்தியைத் தருகிறது என்றார்.இவரிடம் பேச: 86104 80032

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X