அழகான பெண்களை மட்டுமல்ல அழகான பெண்கள் அணியும் ஆடைகளையும் ஆண்கள் வர்ணிக்க தானே செய்கிறார்கள்... பெண்களின் அழகை வர்ணிக்கும் ஆண்களே ஆடைகளை டிசைன் செய்தால் அந்த ஆடைகள் கூடுதல் அழகில் ஜொலிக்க தானே செய்யும்... இளம் பெண்களை டிசைனர் ஆடைகளால் செதுக்கும் சென்னை பேஷன் டிசைனர் விக்கி கபூர் என்ன சொல்கிறார்...
''சின்ன வயதில் இருந்தே கலர்கள் மேல் இருந்த காதல் பேஷன் டிசைனராக மாற்றியது. முதல் சாரீயை அக்காவிற்கு டிசைன் செய்து கொடுத்தேன். 15 ஆண்டுகளாக ஸ்டூடியோ கலர்ஸ் என்ற பெயரில் டிசைனிங் செய்கிறேன்.
எத்னிக், பீரீ அண்ட் போஸ்ட் பிரைடல் போட்டோ ஷூட் ஆடைகளை அதிகம் டிசைன் செய்கிறேன். டிவைட் கட் போல் இருக்கும் ஷெராரா, பைஜாமா தோற்றத்தில் பலாகோ, தாவணி ஸ்டைலில் லெகங்கா என பல டிசைனர் ஆடைகள் வடிவமைக்கிறேன். இதுவரை 25 பேஷன் ஷோக்களில் நான் வடிவமைத்த ஆடைகள் அணிந்து அழகிகள் வலம் வந்துள்ளனர்.

நடிகைகள் யாஷிகா ஆனந்த், மீரா மிதுன், சாக்ஷி அகர்வால், அபிராமி ஐயர் ஆகியோருக்கு டிசைன் செய்துள்ளேன். குறும்படங்களுக்கும் டிசைன் செய்கிறேன். சினிமா டிசைனராக முயற்சி செய்து வருகிறேன்.2019ல் 12 மாடல் மங்கைகளுக்கு 'மெட்ராஸ் தீம்' பாரம்பரிய ஆடைகளை டிசைன் செய்து காலண்டர் ஷூட் எடுத்தேன்.
2021க்கு 'ராயல் பிரைட் தீம்' நார்த் இந்தியன் ஸ்டைல் ஆடைகள் டிசைன் செய்து காலண்டர் ஷூட் எடுத்துள்ளேன். நயன்தாராவுக்கு டிசைன் செய்வதே என் கனவு. பேஷன் டிசைனர் மனீஷ் மல்கோத்ரா என் ரோல் மாடல்'' என்றார்.
-ஸ்ரீனி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE