விளையாட்டை விளையாட்டா பாருங்க... ‛பிக்பாஸ்' சம்யுக்தா

Added : டிச 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அம்மா, நடிகை, மாடல், பிஸினஸ் பெண் என பல பட்டங்களுடன் பயணித்த, யார் என்ன சொன்னால் என்ன, எப்படி பழகினால் என்ன நான் நானாக இருப்பேன் என 'பிக் பாஸ்' வீட்டில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மக்கள் மனம் கவர்ந்த சம்யுக்தா மனம் திறக்கிறார்... பிக் பாஸ்'ல் உண்மையா இருந்தீங்களா, இல்லை 'கேம்க்'காகவா 100 சதவீதம் உண்மையா, நேர்மையா விளையாடினேன், நான் நானாக இருந்தேன். 'பிக்
விளையாட்டை விளையாட்டா பாருங்க... ‛பிக்பாஸ்' சம்யுக்தா

அம்மா, நடிகை, மாடல், பிஸினஸ் பெண் என பல பட்டங்களுடன் பயணித்த, யார் என்ன சொன்னால் என்ன, எப்படி பழகினால் என்ன நான் நானாக இருப்பேன் என 'பிக் பாஸ்' வீட்டில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மக்கள் மனம் கவர்ந்த சம்யுக்தா மனம் திறக்கிறார்...


பிக் பாஸ்'ல் உண்மையா இருந்தீங்களா, இல்லை 'கேம்க்'காகவா


100 சதவீதம் உண்மையா, நேர்மையா விளையாடினேன், நான் நானாக இருந்தேன்.


'பிக் பாஸ்'ல் இருந்து வெளியில் வந்ததும் செய்த முதல் விஷயம்


என் மகனுடன் அதிக நேரம் செலவிட்டேன், ஆன்லைன்ல பரோட்டா, பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்.


'பிக் பாஸ்'ல் சனி, ஞாயிறுகளில் மட்டும் ஸ்பெஷல் டிரஸிங்...


ஏற்கனவே நாங்க கொடுத்த ஆடையை ஸ்டோர் ரூமில் வைத்து சனி, ஞாயிறு கொடுப்பாங்க. சில நேரம் ஸ்பான்ஸர்ஸ் டிரஸ் கிடைக்கும். மேக்கப் நாங்களே பண்ணிக்குவோம்.


வீட்டில் இருந்தவர்கள் பற்றி சில வார்த்தைகள்


அர்ச்சனா - ஸ்ட்ராங்க், நிஷா - காமெடி, சனம் - ஓவர் ரியாக்ட், ஷிவானி - யங் அன் கியூட், ரம்யா - உண்மையா விளையாடுவாங்க, கேபி - டாம் பாய், அனிதா - மூடி டைப்


'பிக் பாஸ்'ல குரூப்பிஸம் இருக்குன்னு சொல்றாங்களே


உள்ளே சிலர் அவங்களுக்கு பிடிச்சவங்க கூட இருக்காங்க. அடுத்தவங்களை காலி பண்றதுக்காக 'குரூப்பிஸம்' பண்றது எல்லாம் இல்லை.


பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டிப்ஸ் கொடுப்பீங்களா


நியூட்ரிஷன் படித்திருப்பதால் நிறைய டிப்ஸ் கொடுப்பேன். டிரஸ் பண்றதுக்கு முன் சிலர் என்னிடம் இது மேட்ச் ஆகுமா, அது போட்டுக்கலாமானு ஐடியா கேட்பாங்க. மேக்கப் பண்ண உதவி செய்வேன்


பிக்பாஸ்ல ஆரி மேல உங்களுக்கு என்ன அப்படி தனிப்பட்ட கோபம்

ஆரி மேல கோபம் இல்லை. சில டாஸ்க்குகளில் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கின மாதிரி இருந்தது. அதுக்கு அவர் விளக்கம் தரலை. வெளியில் இப்படி பேசும் அளவு நடக்கலை. விளையாட்ட விளையாட்டா பார்த்தா போதும்.

-கவி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
14-டிச-202008:17:41 IST Report Abuse
ravi சம்யுக்தா அர்ச்சனாவோடு சேர்த்துக்கொண்டு நாசக்காரியாய் இருந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X