மதுரை: தமிழகத்தில் நாளை (டிச.,14) முதல் டிச., 20 வரை மின்சார சேமிப்பு வார விழா கொண்டாடப்படும் நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மதுரை மின் பகிர்மான வட்டம் அறிவுறுத்தி உள்ளது.
மின்சாரம் சேமிக்க கட்டடம் கட்டும் போதே பேதியவெளிச்சம்கிடைக்கும்படி கட்ட வேண்டும். தேவை இல்லாத இடங்களில் மின் விசிறி, மின் விளக்குகள், டிவி, பிரிட்ஜ் இயக்கக்கூடாது. போதிய அளவு சூரிய மின் சக்தி பயன்படுத்த வேண்டும். டியூப் லைட்டுகளுக்கு எலக்ட்ரானிக் சோக், மின் விசிறிகளுக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டர், குண்டு பல்புகளுக்கு பதில் எல்.இ.டி., பல்ப் பொருத்த வேண்டும். ஐ.எஸ்.ஐ., மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மட்டுமே வாங்க வேண்டும்.ஒரு யூனிட் மின்சாரம் சேமித்தால் இரு யூனிட் மின்உற்பத்தி செய்ததற்கு சமம் என்பதால் மின்சார சேமிப்பு வாரம் தவிர பிற நாட்களிலும் மின்சாரம் சேமிக்க மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE