தமிழ்நாடு

அக்கறை இல்லை: சிதையும் கோயில் குளங்கள், கல்மண்டபங்கள் : புனரமைப்பு பணிகளில் தொடரும் அலட்சியம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் புராதன சிறப்புமிக்க கோயில்களில் சேதமடைந்துள்ள குளங்கள், சிற்பங்கள், மண்டபங்களை புனரமைக்கும் பணிகள் தாமதப்படுவதால்,இவைகள் சிதைந்து மண்ணொடு மண்ணாக மக்கி வருவது பக்தர்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கி வருகிறது.எவ்வித அறிவியல் கருவிகள் இல்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத காலத்தில் பிரமிக்கதக்க கட்டடங்கள், கோயில்கள், குளங்கள்,

ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் புராதன சிறப்புமிக்க கோயில்களில் சேதமடைந்துள்ள குளங்கள், சிற்பங்கள், மண்டபங்களை புனரமைக்கும் பணிகள் தாமதப்படுவதால்,இவைகள் சிதைந்து மண்ணொடு மண்ணாக மக்கி வருவது பக்தர்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்கி வருகிறது.எவ்வித அறிவியல் கருவிகள் இல்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத காலத்தில் பிரமிக்கதக்க கட்டடங்கள், கோயில்கள், குளங்கள், அணைகள் ஆகியவைகளை கட்டி இன்றைய சமுதாயத்தை பிரமிக்க வைத்தவர்கள் அன்றைய தமிழர்கள். அதனால் தான் இன்றும் பழங்கால கட்டடங்கள் மிகவும் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் கட்டும் சிறு தெருப்பாலங்கள் கூட கட்டியவேகத்தில் ஓட்டை விழுந்துவிடுகிறது.பழங்காலத்தில் கட்டபட்ட கோயில்கள், குளங்கள், கல்மண்டபங்களை முறையாக பராமரிக்காததால் அவைகள் இன்று சிதையத்துவங்கி உள்ளது. பல கோயில் குளங்களின் பக்கவாட்டு சுவர் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. கல்மண்டபங்களில் துாண்கள் வலுவற்று வருகிறது. கோயில் கோபுரங்களில் செடி, கொடிகள் வளர்ந்து விரிசலை ஏற்படுத்துகிறது. இவற்றை பாதுகாப்பதில் ஹிந்துஅறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தாலும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்தால் தான் அவற்றை புனரமைக்கமுடியும். ஆனால் தொல்லியல் துறையில் குறைந்த பணியாளர்களே இருப்பதால் அனைத்து கோயில்களிலும் ஆய்வு செய்து உடனடியாக அனுமதி தரமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.இது போன்ற அலட்சியத்தால் மாவட்டத்தில் பல கோயில் குளங்கள், கல்மண்டபங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்று கட்டமுடியாத குளங்கள், கல்மண்டபங்களை காலதாமதமின்றி சீரமைக்கவேண்டும்.


வேண்டாமே தாமதம்

ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் நீராடும் புனித குளமாக விளங்கும் திருமுக்குளத்தின் பக்கவாட்டு கற்சுவர்கள் நான்கு பக்கமும் சிதைந்து வருகிறது. வடக்கு பக்க கற்கள் விழுந்து பல ஆண்டாகியும் இதுவரை சீரமைக்கபடவில்லை. இக்குளத்தை சீரமைத்து, தண்ணீர் தேக்கினால் நகரில் 3 ஆண்டுக்கு நிலத்தடிநீர்மட்டம் அதிகரிக்கும். தற்போதைய காலத்தில் இதுபோன்ற குளங்கள் கட்டக்கூட முடியாதநிலையில் இருப்பதை முறையாக பராமரிக்கவேண்டும். இதேபோல் ஒவ்வொரு ஊரிலுள்ள கல்மண்டபங்கள் கவனிப்பாரின்றி கிடக்கிறது. இதையும் காப்பாற்ற அரசு நிர்வாகத்தின் நடவடிக்கை அவசியம். -சரவணகார்த்தி, சமூக ஆர்வலர், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X