தமிழ்நாடு

குடை போன்று நிழல் தரும் மரம்: மல்லாங்கிணர் ரோட்டில் அற்புதம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
விருதுநகர்:இயற்கைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை என்பதற்கு உதாரணமாக எண்ணற்ற நிகழ்வுகள், அடையாளங்கள், நினைவு சின்னங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் விருதுநகர் - மல்லாங்கிணர் ரோட்டில் குடை போல் படர்ந்து நிழல் தரும் நாட்டு கருவேல மரம் ஒன்று தினமும் அற்புதத்தை நிகழ்த்தி வருகிறது. இவ்வழியாக செல்வோர் மரத்திற்கு அடியில் நின்று சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்வதை வழக்கமாக



விருதுநகர்:இயற்கைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை என்பதற்கு உதாரணமாக எண்ணற்ற நிகழ்வுகள், அடையாளங்கள், நினைவு சின்னங்கள் இருக்கின்றன.
அந்த வரிசையில் விருதுநகர் - மல்லாங்கிணர் ரோட்டில் குடை போல் படர்ந்து நிழல் தரும் நாட்டு கருவேல மரம் ஒன்று தினமும் அற்புதத்தை நிகழ்த்தி வருகிறது. இவ்வழியாக செல்வோர் மரத்திற்கு அடியில் நின்று சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக மண்டிக்கிடக்கிறது. இவற்றில் கார்பன்டை ஆக்சைடு அதிகளவு வெளியேற்றுவதால் அப்பகுதியில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். இதனாலேயே சீமைக்கருவேல செடிகள், மரங்களில் பறவைகள் கூடு கட்டாது. பிற விலங்குகளும் நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்காது. இவை கரி தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நேர் மாறாக பலன் தரும் நாட்டு கருவேல மரங்கள் ஏர் உழவனின் நண்பனாக இருந்து வருகிறது. நன்கு விளைந்த வைரம் பாய்ந்த நாட்டு கருவேல மரங்கள் கலப்பை செய்யவும், மாட்டு வண்டியின் எடையை தாங்கும் பட்டை கட்டைகள் தயாரிக்கவும், வேளாண் கருவிகள் தயாரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
நன்மை செய்யும் நாட்டு கருவேல மரங்களை சமூக வனத்துறை சார்பில் கண்மாய்கள், குளங்களில் நட்டு வளர்க்கப்படுகிறது. நன்கு விளைந்ததும் ஏலம் விட்டு வெட்டப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.நிழல் தரும் மரங்களில் வேப்ப மரத்தையடுத்து நாட்டு கருவேல மரங்கள் இடம் பிடித்துள்ளன. இவை அடர்ந்து, விரிந்து, பரந்து, செழிப்பாக வளர்ந்து குடை போல் நிழல் தரும் அற்புதத்தை நிகழ்த்துகிறது. இதன் பயன் வாகன ஓட்டிகளுக்கும் கிடைக்கட்டும் என கருதி நெடுஞ்சாலையோரங்களில் நாட்டு கருவேல மரங்களை நடப்பட்டு வருகிறது. இதன் அழகில் மயங்கும் வெளிநாட்டவர் தங்களது சொகுசு பங்களாக்கள், சாலையோரங்களில் நட்டு ஆசை ஆசையாய் வளர்த்து வருவதை பெருமையாக கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X