விருதுநகர்விருதுநகர் அருகே கன்னிச்சேரி டி.அம்மாபட்டி துவக்கப்பள்ளி கட்டடம் சுண்ணாம்பு கலவையில் கட்டுமானம் அமைக்கப்பட்டது. இது 55 ஆண்டுகளை கடந்து கம்பீரமாகவும், மிடுக்காகவும், உறுதித்தன்மையுடனும் உழைத்து அக்காலத்து கட்டுமான கலைக்கு பெருமை சேர்த்து வருகிறது.இப்பள்ளி கட்ட 1965ல் கிராம மக்கள் அரசிடம் வலியுறுத்தினர். இதன் பயனாக அம்மாபட்டி அப்போதைய ஊராட்சி தலைவர் சங்கம செட்டியார் முயற்சியால் சுண்ணாம்பு கலவை, கருங்கற்கள், செங்கலை கொண்டு கட்டடம் கட்டப்பட்டது.தரமான ஓடுகளால் மேற்கூரை அமைத்தனர். கட்டட கமிட்டிக்குழு தலைவர் பொன்னுசாமி நாயக்கர் தலைமையில் 1965 ஜன., 8 ல் அப்போதைய மத்திய சமுதாயத்துறை உதவி அமைச்சர் மூர்த்தி கட்டடத்தை திறந்து வைத்தார். கிராம மக்கள் பள்ளியை கோயிலாக கருதி போற்றி வருகின்றனர்.ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 514 மதிப்பில் 2007 -- 08 ல் பள்ளி புனரமைக்கப்பட்டது. ஆண்டுகள் 55ஐ கடந்தும் கட்டடம் உறுதித்தன்மையுடன் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. முன்னாள் மாணவர்கள் அவ்வப்போது கட்டட புனரமைப்பு பணிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இக்கட்டடத்தில் சிறு கீறல் கூட விழவில்லை. சுற்றுச்சுவர்களில் வர்ணம் பூசியும், கதவுகள், ஜன்னல்களில் பெயின்ட் அடித்தும் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
பள்ளியில் படித்தது பெருமைஇப்பள்ளியில் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். தலைமை ஆசிரியை வீரலட்சுமி, ஆசிரியர் சின்னராஜ் ஆகியோர் மாணவர்களை தங்களின் சொந்த பிள்ளைகள் போல் நினைத்து கற்பித்தனர். எனக்கு தற்போது 60 வயது ஆகிறது. பள்ளியின் நினைவுகள் இன்றளவும் பசுமையாக மனதை தாலாட்டுகிறது. இப்பள்ளியில் படித்ததை பெருமையாக கருதுகிறேன். நல்ல மாணவர்களை உருவாக்கியதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்கி வரும் பெருமைஇப்பள்ளிக்கு உண்டு.- துரைராஜ், முன்னாள் மாணவர். அம்மாபட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE