பொது செய்தி

இந்தியா

பார்லி தாக்குதல் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: பார்லி., தாக்குதலின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதன் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று
2001 Parliament, பார்லிமென்ட், நினைவுதினம், தலைவர்கள்,

புதுடில்லி: பார்லி., தாக்குதலின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதன் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுமசரிக்கப்படுகிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி டுவிட்டரில், ‛2001ல் பார்லிமென்ட் மீது நடத்தப்பட்ட கோழைத்தமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது. பார்லிமென்ட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவுக்கூறுவோம். எப்போதும் அவர்களுக்கு இந்தியா நன்றி செலுத்தும்.' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:


2001ல் இதே நாளில் பார்லிமென்ட்டை பாதுகாத்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான தியாகிகளை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. நமது ஜனநாயக ஆலயத்தின் பாதுகாவலர்களின் பெரும் தியாகத்தை நினைவுகூரும் அதே வேளையில், பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கான எங்கள் வழியை நாங்கள் பலப்படுத்துகிறோம்.


latest tamil news

வெங்கையா நாயுடு:


2001ல் பார்லிமென்ட் மீதான பயங்கரவாத தாக்குதலில் இருந்து நமது ஜனநாயகத்தின் ஆலயத்தை பாதுகாப்பதற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான மனிதர்களுக்கு ஒரு பெரிய அஞ்சலி! பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது. பயங்கரவாத சார்பு நாடுகளுக்கு எதிராக உலக சமூகம் ஒன்றுபட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DHAYANIDHI - LONDON,யுனைடெட் கிங்டம்
13-டிச-202017:25:07 IST Report Abuse
DHAYANIDHI endrum
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-டிச-202015:10:53 IST Report Abuse
Rafi இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அப்போதே கொல்லப்பட்டு விட்டான்கள், அவன்கள் தங்குவதக்கு வாடகைக்கு இடம் பிடித்து கொடுத்தான் என்று ஒருவனை தூக்கில் தொங்க விட்டோம், ஆனால் வீடு வாடகை எடுத்து கொடுக்க ஒரு காவல் அதிகாரியினால் வற்புறுத்தப்பட்டேன் என்று அவன் கூறியும், அந்த காவல் அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, சமீபத்தில் அதே காவல் அதிகாரி வேறு ஒரு பயங்கரவாதியுடன் காரில் சென்றபோது பிடிபட்டதும், வழக்கு பதிவிடப்பட்டது, அந்த விசாரணை நிலை மூழ்கடிக்கப்பட்டு கொண்டிருக்கு. நியாயமான முறையில் விசாரணை நடந்தால் உண்மை குற்றவாளிகள் பிடிபடமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X