திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி எதிரே ரஹ்மத் நகரில் கேபிள் டிவியில் பணியாற்றி வந்த காளிராஜ் 26, என்பவர், தனது தங்கை முறை கொண்ட மேகலாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த, பெண்ணின் உறவினர்கள், கடந்த 10 ம் தேதி இரவு காளிராஜை வெட்டி கொலை செய்தனர்.
இந்நிலையில், மேகலா, பாதுகாப்புக்காக காப்பகத்தில் தங்க வைக்கபட்டிருந்த நிலையில் இன்று அங்கேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE