பள்ளிபாளையம்: ''யோகா, தியானம் செய்தால் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கும்,'' என, பள்ளிபாளையம் மனவளக்கலை மன்ற அறிவுத்திருக்கோவிலில் நடந்த விழாவில் யோகா பேராசிரியர் சீனிவாசன் பேசினார்.
அவர் பேசியதாவது: நோய் வருவதற்கு அடிப்படை காரணமே மனம் தான். மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழக்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவ செலவுக்கு செலவு செய்யும் நிலை வந்து விட்டது. வாழ்க்கையில் முழுமையாக மாற்றத்தை கொடுக்க கூடியது, யோகா, தியானம் மட்டுமே. இதனால் வாழ்க்கையின் மாற்றம் என்பது, முன்னேற்றமாக இருக்கும். அதே போல நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பரபரப்பான காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE