பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர் பங்கேற்பு

Added : டிச 13, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: மாவட்டத்தில், நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.குமாரபாளையம் அருகே, சேலம்- கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு விழா, கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். டிராக்டர், ரோட்டவேட்டர் உள்ளிட்ட வாகனம், விவசாய கருவிகளை, அரசு மானியத்துடன்

குமாரபாளையம்: மாவட்டத்தில், நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.


குமாரபாளையம் அருகே, சேலம்- கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு விழா, கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். டிராக்டர், ரோட்டவேட்டர் உள்ளிட்ட வாகனம், விவசாய கருவிகளை, அரசு மானியத்துடன் விவசாய குழுவினருக்கு அமைச்சர் வழங்கினார். ஆர்.டி.ஓ., மணிராஜ், தட்டான்குட்டை பஞ்., தலைவி புஷ்பா உள்பட பலர் பங்கேற்றனர்.


* குமாரபாளையத்தில், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, 500க்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர் தங்கமணி பெற்றார். முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய தொகைக்கான ஆணையை, 15 பேருக்கு வழங்கினார்.


* மல்லசமுத்திரம் ஒன்றிய அலுவலகத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 17 லட்சத்து, 41ஆயிரத்து, 250 ரூபாய் மதிப்பீட்டில், ஏழு மின்கல இயக்கு வாகனங்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார். தொடர்ந்து, காளிப்பட்டியில் 105 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி உட்பட பலர்கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X