பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துப்பாளையம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Added : டிச 13, 2020
Share
Advertisement
கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், கார்வாழி ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் பாசனத்துக்காக, சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு, 90 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை தண்ணீர் திறப்பு, 60 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு

கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம், கார்வாழி ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் பாசனத்துக்காக, சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு, 90 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை தண்ணீர் திறப்பு, 60 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.93 அடியாக இருந்தது.


* திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணையில் இருந்து, 1,050 கன அடி தண்ணீர் ஆற்றிலும், 500 கன அடி தண்ணீர் புதிய வாய்க்காலிலும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.67 அடியாக இருந்தது. வினாடிக்கு, 1,513 கன அடி தண்ணீர் வந்தது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 6,460 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு, காவிரியாற்றில், 6,060 கன அடியும், மூன்று பாசன கிளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில், மழை பெய்யவில்லை. ஆனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை, 8:00 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X