பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பான பரிசு வரும்: போக்குவரத்து துறை அமைச்சர் சூசகம்

Added : டிச 13, 2020
Share
Advertisement
கரூர்: ''வரும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பான பரிசு வர இருக்கிறது,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.கரூர் மாவட்டம், கடவூர் பஞ்., யூனியன் பகுதியை சேர்ந்த, தி.மு.க., - அ.ம.மு.க.,வினர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, கரூரில் நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கடந்த, ஒன்பதரை ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், ஏழை மக்களுக்கான திட்டங்கள்

கரூர்: ''வரும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பான பரிசு வர இருக்கிறது,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.


கரூர் மாவட்டம், கடவூர் பஞ்., யூனியன் பகுதியை சேர்ந்த, தி.மு.க., - அ.ம.மு.க.,வினர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, கரூரில் நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கடந்த, ஒன்பதரை ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், ஏழை மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, பொங்கல் பரிசாக, 100 ரூபாய் மற்றும் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதை, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியவர் முதல்வர் பழனிசாமி. வரும் பொங்கல் பண்டிகைக்கும், சிறப்பான பரிசு வர இருக்கிறது. கடவூர் யூனியன், தரகம்பட்டியில் இருபாலர் படிக்கும் வகையில், அரசு கலைக்கல்லூரி நடப்பாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு ஆய்வு நடந்து வருகிறது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும். வழக்கமாக, கடவூர் யூனியன் அடங்கிய கிருஷ்ணராயபுரம் தொகுதி, அ.தி.மு.க., வின் கோட்டையாகும். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு தொகுதிகளில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில்தான், அதிக ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வுக்கு வெற்றி கிடைக்கும். கரூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், 15 ஆயிரம் பேருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 பேருக்கு வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, கடவூர் பஞ்., யூனியன் தலைவர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் திருவிகா உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X