சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி நகையை வைத்து கடன்: தொழிலாளி மீது வழக்குப்பதிவு

Added : டிச 13, 2020
Share
Advertisement
கரூர்: கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில், போலி நகையை வைத்து கடன் பெற்றதாக, கூலி தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தான்தோன்றிமலை தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரகாஷ், 35; கூலி தொழிலாளி. இவர் கடந்த, ஓராண்டுக்கு முன், கரூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில், தங்கம் என கூறி, எட்டு வளையல்களை வைத்து, ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் கடன்

கரூர்: கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில், போலி நகையை வைத்து கடன் பெற்றதாக, கூலி தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தான்தோன்றிமலை தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரகாஷ், 35; கூலி தொழிலாளி. இவர் கடந்த, ஓராண்டுக்கு முன், கரூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில், தங்கம் என கூறி, எட்டு வளையல்களை வைத்து, ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதை மீட்க அவர், கடந்த, ஓராண்டாக வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் வளையல்களை சோதனை செய்தனர். அப்போது, போலி நகை என தெரியவந்தது. இதனால், நிதி நிறுவன மண்டல மேலாளர் தியாகு, 39, என்பவர், ஸ்ரீபிரகாஷ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X