அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில், போலீஸ் ஸ்டேஷன் அருகே, கோவை செல்லும் தென்னிலை சாலையும், அருகே திண்டுக்கல் செல்லும் புறவழிச்சாலையும் பிரிகிறது. இவ்வழித்தடத்தில் தினசரி மதுரை, கோவை, தாராபுரம், திருப்பூர், ஈரோடு போன்ற முக்கிய நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பஸ் போக்குவரத்து நடக்கிறது. தவிர, அருகாமை மாநிலமான கேரளாவிற்கு, அதிக அளவில் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் அங்கு பல்வேறு திசைகளில் இருந்து வரும் வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, அப்பகுதியில் நிகழும் வாகன விபத்தினை தவிர்க்க, போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் ரவுண்டானா மற்றும் சிக்னல் அமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE