அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி யூனியன் அலுவலகம் முன் தேங்கியுள்ள மழை நீரால், அவ்வழியே செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகியுள்ளனர். அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக, புயலின் தாக்கத்தால் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தாராபுரம் சாலையில், யூனியன் அலுவலகம் அருகே தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிவதற்கு வடிகால் வசதி ஏதுமில்லை. அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களின் டயர்களில், தேங்கியுள்ள மழைநீர் பட்டு இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மீது தெறிப்பதால் மிகுந்த இன்னலுக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி அமைக்க முன்வரவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE