பொது செய்தி

இந்தியா

போராட்டத்தில் தேசவிரோதிகள் இருந்தால் கைது செய்யுங்கள்: விவசாயிகள் போராட்டக்குழு

Updated : டிச 13, 2020 | Added : டிச 13, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: தேசவிரோதிகள் யாரும் விவசாயிகள் போராட்டத்தில் இல்லை எனவும், அவ்வாறு இருந்தால், அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்றும் போராட்டக் குழுவின் தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த
Delhi, FarmersProtest, FarmLaws, டில்லி, விவசாயிகள், போராட்டம், வேளாண் சட்டம், தேசவிரோதிகள்

புதுடில்லி: தேசவிரோதிகள் யாரும் விவசாயிகள் போராட்டத்தில் இல்லை எனவும், அவ்வாறு இருந்தால், அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்றும் போராட்டக் குழுவின் தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில், தேச விரோத குற்றச்சாட்டில் சிறையில் உள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம், முன்னாள் மாணவர் உமர் காலீத், சமூக செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் பெரைரா உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பப்பட்டன. இவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


latest tamil news


இந்த விவகாரத்தில் விவசாயிகள் போராட்டத்தை தேசவிரோத சக்திகளும், இடதுசாரிகளும் கைப்பற்றி விட்டதாக, மத்திய அமைச்சர்கள் சிலர் புகார் கூறினர்.

இதுகுறித்து விவசாயிகள் போராட்டக் குழுவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் பாரதிய கிஸான் யூனியன் தலைவருமான ராகேஷ் திகாய்த் கூறியதாவது: மத்திய அமைச்சர்களின் புகார் தவறானது. தேசவிரோத சக்திகள் எவரும் எங்களுடன் இல்லை. அவ்வாறு இருந்தால், மத்திய உளவுத் துறையிடம் அறிக்கை பெற்று அவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-டிச-202023:08:50 IST Report Abuse
sankaseshan சாயி சுந்தர் உண்மையான விவசாயிகள் நிலத்தில் வேலைசெய்கின்றனர் போராட்டம் பண்ணு பவர்கள் தேசவிரோத காலிஸ்தா நிக ல் .
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
13-டிச-202022:59:45 IST Report Abuse
Marai Nayagan எந்த மாற்றம் சீரமைப்பு கொண்டுவந்தாலும் அதை எதிர்த்து கலவரத்தை தூண்டி குளிர் காய்வதையே ஒரு வேலையாக வைத்திருக்கும் எதிர்கட்சிகள் நாட்டை முன்னேற விடாமல் தடுப்பதியே குறிக்கோளாக வைத்துள்ளன. சீனா போன்று அடித்து ஒரு போராட்டமும் இல்லாத நாடக பத்தாண்டுகள் இருந்தால் சீக்கிரம் முன்னேறும். எதற்கெடுத்தாலும் சீனாவை முன்னுதாரம் காட்டும் இடதுசாரி போராளி கூட்டம் இதற்க்கு தயாரா?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
13-டிச-202021:21:12 IST Report Abuse
mathimandhiri நம்மூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உள்ளே நுழைந்த போராளீஸ் , மூர்கன்ஸ் , அழிவு சக்திகள் , போர்வையாளன்ஸ் போல இங்கு அந்நிய கைக்கூலிகள் சீனா எடுபிடி அரசியல் கூஜாக்கள் , கொள்ளைக்காரர்க l போன்றோர் அதிக அளவில் நுழைந்திருக்கிறார்கள் .அவர்களின் ஒரே குறிக்கோள் எப்படியாவது யார் மூலமாவது பாதுகாப்புப் படையினர் அல்லது டெல்லி போலீஸ் மூலம் ஒரு சீக்கிய ரத்தம் அங்கே சிந்தப்பட்ட வேண்டும். அதன் மூலம் ஒரு மிகப் பெரிய உள்நாட்டுக் கலவரத்தை நிகழ்த்தி உலக சீக்கியர்கள், காலிஸ்தான் கூவிகள் இவர்களை மொத்தமாக மோடி மேல் திருப்பி அவரைக் குறி வைக்கச் செய்வது இவைதான். மோடியின் நடவடிக்கைகைகளால் பிழைப்புப் போன முதலைகள் அந்நிய சக்திகள் துணையுடன் ஊடுருவி உள்ளனர். ஹரியானா விவசாயிகள் கிட்ட தட்ட அனைவரும் இடத்தைக் காலி செய்து விட்ட நிலையில் 2024 தேர்தலுக்கு முன் மோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இத்தாலி அண்ட் கோ வின் பகீரதப் பிரயத்தனமாகவும் இருக்கலாம். நல்ல வேலை டெல்லி போலீஸ் கெஜ்ரிவால் கையில் இல்லை. இருந்திருந்தால் இது நடந்தே கூட இருக்கும். யார் கண்டது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X