மதுரை:மதுரையை 2-வது தலைநகராக்கி காட்டுவேன் என மதுரை தொழில் வர்த்தக கூட்டமைப்பு அரங்கில் பேசிய ம.நீ.ம கட்சியின் தலைவர் கமல் பேசினார்.

மதுரையை மாற்றி காட்ட எம்ஜிஆர் விரும்பினார். அவரது கனவை நிறைவேற்ற மதுரையை குப்பை, துாசி, மழைநீர்,கழிவுநீர் அற்ற மதுரையை உருவாக்குவோம்.
ஊழல்வாதிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரமிது. ஜனவரியில் காளைகளுடன் ஜல்லிக்கட்டு, மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு.அரசு, அத்தியாவசிய பொருட்களைப்போல் மதுவிற்க கூடாது.

தேடித்தீர்ப்போம் வா, என்பதைப்போல் குறைகளை தேடி தீர்க்க வேண்டும். நல்லவர்களின் களமாக இருந்த அரசியல் ரவுடிகளின் களமாக ஆக்கிவிட்டனர். இளைஞர்களை கைக் கூலிகளாக இல்லாமல் முதலாளிகளாக மாற்றி காட்டுகிறேன்.நேர்மையை கொண்டு தேர்தலில் வெல்வேன். ம.நீ.ம. கட்சியில் நேர்மை மட்டுமே வாக்குறுதி அளிப்போம்.ஆண்களை போல் பெண் விவசாயிகளை உருவாக்குவோம். இவ்வாறு கமல் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE