திருப்பூர்:திருப்பூரில், பத்திரப்பதிவு கட்டணத்தில் போலி ரசீது மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதால், விசாரணை நடந்து வருகிறது.
![]()
|
நிலம் வாங்குவது, விற்பது, கிரையம் செய்வது, பெயர் மாற்றுவது, திருத்தம், வில்லங்கம் உட்பட பல்வேறு பணிகளுக்காக தினமும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு துறையை சார்ந்துள்ளனர். பணப்புழக்கம் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டம், பிற மாவட்டங்களை காட்டிலும், பத்திரப்பதிவு அதிகம். தனித்தனியாக செயல்பட்ட நான்கு அலுவலங்களை ஒருங்கிணைத்து, நகர பகுதியில் இருந்து, 10 கி.மீ., தள்ளி, நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் கட்டப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
போலி ரசீது புகார்
இதில்,
மாவட்ட பதிவாளர் அலுவலகம், இணைப்பதிவாளர் அலுவகம் எண் -1 மற்றும் 2,
தொட்டிபாளையம் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. பத்திரப்பதிவு
அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலமாக கட்டப்படும் பதிவு கட்டணத்துக்கு போலி ரசீது
மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. சொத்து
கிரயம், விற்பனை உட்பட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக அலுவலகத்துக்கு வரும்
நபர்களிடம் நேரடியாக பணத்தை பெற்று கொண்டு, ஏற்கனவே பணத்தை கட்டியவர்களின்
விவரங்களை காட்டி, கோடிக்கணக்கான ரூபாயை அரசுக்கு வருவாய் இழப்பு
ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது
குறித்து தமிழக பதிவுத்துறை தலைவர் சங்கர், திருப்பூரில் ஆய்வு நடத்த
உத்தரவிட்டார். அதன்பேரில், கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஜெகதீசன்,
திருப்பூரில் ஆய்வு செய்து விசாரித்தனர்.மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம்
மற்றும் தணிக்கை), இணை சார்-பதிவாளர்கள் எண் -1, எண்-2 மற்றும் இளநிலை
உதவியாளர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள் உட்பட பலரிடம், டி.ஐ.ஜி., விசாரணை
நடத்தினார்.
அலுவலர்கள் 'பீதி'
இந்த
விவகாரம் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பத்திரப்பதிவு துறையை சேர்ந்த
ஒருவர் கூறியதாவது:திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு கட்டணம்
உட்பட பல்வேறு வகையான அரசுக்கு வரக்கூடிய வருவாய் தொகையை முறைகேடாக, போலி
ரசீது மூலம் பல கோடி ரூபாயை மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. இதுபோன்ற
மோசடி மற்ற மாவட்டங்களில் நடந்துள்ளதா என்பது குறித்து, தனிக்குழு அமைத்து
விசாரிக்க வேண்டும்.
கடந்த,
மூன்று ஆண்டுகளாக வெளியில் தெரியாத வகையில் மோசடியில், சிலர் கூட்டு
சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த புகார் தொடர்பாக நடந்த ஆய்வு காரணமாக,
அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் என, அனைவரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.
டி.ஐ.ஜி.,யின் விசாரணையின் தொடர்ச்சியாக, இளநிலை உதவியாளர் நான்கு பேரை
கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டனர். எனவே, இந்த பெரிய மோசடியை விசாரிக்க,
நேர்மையான அதிகாரிகள் கொண்ட தனிக்குழுவை அமைத்து விசாரித்தால் மட்டுமே,
எவ்வளவு பணம் சுருட்டப்பட்டது என்பது குறித்த உண்மை வெளியே வரும்.இவ்வாறு,
அவர் கூறினர்.
![]()
|
அறிக்கைக்கு காத்திருப்பு
திருப்பூரில்
நடந்துள்ள 'மெகா' மோசடி குறித்து, தமிழக பதிவுத்துறை தலைவர் சங்கரிடம்
கேட்டதற்கு, ''ரசீது தொடர்பான புகாரில் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.,
திருப்பூரில் விசாரித்துள்ளார். இதுதொடர்பான 'ரிப்போர்ட்' இன்னும் எனக்கு
வரவில்லை. கைக்கு கிடைத்தவுடன், நிச்சயம் விசாரித்து துறை ரீதியான
நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கு, ஏதாவது குழு தேவைப்படும்
பட்சத்தில், அமைக்கப்படும்,'' என்றார்.திருப்பூரில் நடந்த ஆய்வு குறித்து,
கோவை மண்டல துணை பதிவு துறை தலைவர் ஜெகதீசனை பலமுறை மொபைல் போனில் தொடர்பு
கொண்ட போது, நமது அழைப்பை ஏற்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE