ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே யானை தாக்கியதில் தந்தை மகன் பலி.
ஊட்டி அருகே உள்ள பந்தலூர் டான் டீ தேயிலை தோட்ட குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்தராஜ்(48) இவரது மகன் பிரசாந்த்(20) வன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வசித்தும் இவர்கள் யானை சிறுத்தை , புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காரணமாக அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சம்பவத்தன்றுகாட்டு யானை ஒன்று தந்தை மகன் இருவரையும் அடித்து கொன்றது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE