ஏழைகளுக்காக திறந்திருக்கும் வீடு: ஐதராபாத் டாக்டர் நுாதன சேவை

Updated : டிச 14, 2020 | Added : டிச 14, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
ஐதராபாத்:தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில், பசித்தவர்கள் வந்து இலவசமாக சமைத்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து செல்லவும், மாணவர்கள் படித்து பயன்பெற, பல புத்தகங்கள் அடங்கிய, 'அனைவருக்குமான வீடு' என்ற சேவையை, அப்பகுதியை சேர்ந்த டாக்டர், கடந்த, 14 ஆண்டுகளாக செய்து வருகிறார். சமூக சேவைதெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி
ஏழைகள், வீடு, ஐதராபாத், டாக்டர்,

ஐதராபாத்:தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில், பசித்தவர்கள் வந்து இலவசமாக சமைத்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து செல்லவும், மாணவர்கள் படித்து பயன்பெற, பல புத்தகங்கள் அடங்கிய, 'அனைவருக்குமான வீடு' என்ற சேவையை, அப்பகுதியை சேர்ந்த டாக்டர், கடந்த, 14 ஆண்டுகளாக செய்து வருகிறார்.


சமூக சேவை

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இம்மாநில தலைநகரான, ஐதராபாதைச் சேர்ந்த டாக்டர் சூரிய பிரகாஷ். இவரது மனைவி டாக்டர் காமேஸ்வரி. சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு உடைய சூரிய பிரகாஷ், டாக்டர் தொழிலில் இருந்து, 1999ல் விலகினார். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, 'அனைவருக்குமான வீடு' என்ற சேவையை துவங்கினார். ஐதராபாதின், கோத்தாபேட் என்ற இடத்தில், நான்கு அறைகளை உடைய வீடு ஒன்றை உருவாக்கி, அதை ஏழை மக்களுக்காக, 24 மணி நேரமும் திறந்து வைத்துள்ளார்.இந்த வீட்டுக்கு, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அங்கு, சமையலுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் இருக்கும். தங்களுக்கு தேவையானதை சமைத்து சாப்பிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.



பொருள் உதவி


வீடு முழுதும் நிறைய புத்தகங்களை, டாக்டர் சூரிய பிரகாஷ் வாங்கி வைத்துள்ளார். தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், இந்த திறந்த வீட்டில் வந்து, படிப்பதை வழக்கமாக வைத்துஉள்ளனர். கடந்த, 14 ஆண்டுகளாக, இந்த சேவையை, டாக்டர் சூரிய பிரகாஷும், அவரது மனைவியும் செய்து வருகின்றனர்.அவரது சேவைக்கு, அப்பகுதியை சேர்ந்த பலரும், பணம் மற்றும் பொருள் உதவி வழங்கி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baala - coimbatore,இந்தியா
14-டிச-202016:57:00 IST Report Abuse
baala வாழ்த்துக்கள். இவரை பார்த்து யாராவது கெட்டவர்கள் திருந்தினால் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
v sampath - CHENNAI,இந்தியா
14-டிச-202010:41:40 IST Report Abuse
v sampath வித்தியாசமான பார்வை வித்தியாசமான சேவை தொண்டு சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
P.Manickam -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-202007:45:10 IST Report Abuse
P.Manickam கோவில்கள் எப்படி பக்தர்களுக்காக எப்பவும் திறந்திருக்குமோ அப்படியே உங்கள் உள்ளமும் வீடும் இருக்கட்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X